| | அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே |
| (புறம்.112) |
என்று வாய்விட்டுப் பாடி உருகி உணர்கின்றோம். |
இதனால் வருங்காலத்தில் இலக்கியத்தில் ஒரு மாறுதலும் இருக்காது என்று கருதக் கூடாது. மாறுதல் மிகச் சிறிய அளவிலே இருக்கும்; அந்த மாறுதலும் இலக்கியத்தின் உடை என்று சொல்லத் தக்க அமைப்பில் இருக்குமே அல்லாமல், அதன் உயிர் என்று சொல்லத்தக்க அடிப்படையில் இருக்காது. |
இவ்வாறு காலப் போக்கில் இலக்கியத்தில் அமைப்பு மாறுவது இயற்கை. ஆங்கில நாட்டிலும் மற்ற எந்த நாட்டிலும் இந்த மாறுதலைக் காணலாம். ஆங்கிலப் பெரும் புலவர் ஷேக்ஸ்பியர் தம் நாடகங்களையெல்லாம் செய்யுள் வடிவில் எழுதிப் புகழ் பெற்றார். அவரே இன்று தோன்றி அந்த நாட்டில் இலக்கியத் தொண்டு செய்வாரானால், செய்யுள் வடிவான நாடகங்களை எழுதமாட்டார். எழுதினால் பயன் விளையாது. "நான் ஷேக்ஸ்பியர் காலத்தில் பிறந்திருந்தால் நானும் செய்யுள் வடிவில் சிறந்த பல நாடகங்களை எழுதி அவருக்கு ஒரு காசும் கிடைக்காமல் செய்து அவரை ஓட்டாண்டியாக்கி இருப்பேன்" என்கின்றார், இந் நூற்றாண்டில் நாடகம் பல எழுதிப் பெரும் புலவராக விளங்கிய பெர்னார்ட்ஷா. வின்செஸ்டர் என்னும் இலக்கிய ஆராய்ச்சியாளரும் இதே கருத்தை வேறுவகையாகக் கூறுகின்றார். "ஷேக்ஸ்பியரே நூற்றைம்பது ஆண்டுகள் கழித்துத் தோன்றி அந்த நாடகங்களையே எழுதியிருந்தாலும் பயன் ஏற்பட்டு |