பக்கம் எண் :

 அறிவியலும் இலக்கியமும் 167
 
படித்துப் பயன் பெறத்தக்க உரைநடை இலக்கியம் பெருகிய போதிலும், பலமுறை
கற்றுக் கற்று உணர்ந்து உணர்ந்து பயன் பெறத்தகுந்த பாட்டும் சிறப்பிடம் பெற்று
வாழும்.
 
     உரைநடையாக அமைந்துள்ள நூலைப் பலமுறை கற்க முடியாது; கற்க
முயன்றாலும் களைப்பும் சலிப்பும் தோன்றும். இந்தக் களைப்புக்கும் சலிப்புக்கும்
மாற்றாக உள்ளது ஒலிநயம் உடைய பாட்டின் அமைப்பு. ஆகவே, இலக்கியம் ஒரு
பக்கம் பல முறை பயிலத்தக்க ஆழ்ந்த உணர்வும், மற்றொரு பக்கம் களைப்பும்
சலிப்பும் தோன்றாமல் காக்க வல்ல ஊக்கமும் ஊட்ட வல்லதாக விளங்குவது பாட்டு
வடிவில்தான். அதனால் வருங்காலத்தில் தொடர்கதைகளும் சிறுகதைகளும்
நாடகங்களும், இலக்கிய நூல்களாக வீடுதோறும் பரவிப் பெருகிய போதிலும்
காவியங்களும் தனிப் பாடல்களும் அறிஞர் உள்ளங்களில் சிறப்பிடம் பெற்று,
நவில்தொறும் நயம் பயக்கும் இலக்கியங்களாக வாழப் போவது திண்ணம்.
 
     இத்தகைய சிறு மாறுதல், இலக்கிய அமைப்பின் மாறுதலே அன்றி, இலக்கியத்தின்
மாறுதல் அன்று. மக்களின் உணர்வு பண்டைக்காலம் முதல் ஒரே வகையாக இருந்து
வருவதால், இலக்கியத்தின் அடிப்படை மாறாது. இரட்டை மாட்டு வண்டிக்கு இடம்
இல்லாமல் செய்து மோட்டார் லாரி பெருகிவிடும் என்று எண்ணுவது இயற்கை.
ஆனால், இலக்கியத்தின் இடத்தை வேறொன்று கொள்ள முடியாது. இதயம் கொண்டு
உணரும் கற்பனைச் சிறகு கொண்டு பறக்கும் ஆற்றலும் மக்களுக்கு உள்ள வரையில்,
இலக்கிய உணவை ஆக்கி அளிக்கும்