மிதப்பிற்கும் சென்று விட்டவை எத்தனையோ என்று எண்ணி வருந்த வேண்டியுள்ளது. தொகுத்தவர் காலத்தின் பயன் குறைந்தவை என்று அவர் தொகுக்காமல் தள்ளிவிட்டவை ஒருக்கால் இக்காலத்திற்குப் பயன்படும் பாடல்களாக இருக்கக் கூடுமே! ஆகையால் அவர் அவற்றையும் வாழ வைத்திருந்தால் நலமாக இருக்குமே என்று மற்றொரு வகையாகவும் வருந்த வேண்டியுள்ளது. தொகுத்த அந்த நானூறு பாடல்களிலும் சில காணோமே, சிலவற்றில் இடையிடையே சில அடிகள் காணோமே என்ற காப்பாரற்றுக் கழிந்த காலத்தை நினைந்து வருந்தவேண்டியும் உள்ளது; முழுமையாக உள்ள முந்நூற்றுச் சில பாடல்களையும் இன்றுள்ள தமிழர் பலரும் கற்றுப் போற்றவில்லையே என்பதை நினைக்கும்போது வருந்த நேர்கின்றது. | இவ்வாறு வருந்துவதே அல்லாமல் நிழற்படம்போல் தமிழ்நாட்டு வரலாற்றை விடாமல் காட்டும் வரலாற்று நூல் இல்லையே என்று வருந்திப் பயன் என்ன? நிழற்படம் என்பது ஒரு கருவி; அது தோன்றாத பழங்காலத்தில் ஓவியக்கலை ஒன்றே இருந்தது. அதனால்தான், இப்போது சென்னை, திருச்சிராப்பள்ளி, கோவை முதலிய ஊர்களில் பற்பல பகுதிகளைப் படம் பிடித்துக் காட்டுவது போல், பழந்தமிழ்நாட்டு மதுரை, கொற்கை, காவிரிப்பூம்பட்டினம் போன்ற நகரங்களையும் அவற்றின் அரிய உட்பகுதிகளையும் இன்றுள்ள நாம் எல்லோரும் காணுமாறு படங்கள் இல்லை. அத்தகைய படங்கள் இல்லையே என்று இன்று வருந்துவதில் பயன் இல்லை. | காட்சிகளைக் காத்துவைக்க நிழற்படம் உதவுவது போல் நிகழ்ச்சிகளைக் குறித்துவைக்க ஒரு கருவி இருந்தால் நலமாகும். நிழற்படம் குறித்த இடத்தில் உள்ளவற்றை விடாமல் எடுத்துக் காட்டுவது போல், குறித்த காலத்தில் நிகழ்ந்தவற்றை விடாமல் எழுதிக் காக்கும் கருவி | | |
|
|