வளர்ச்சியில் ஒரு படியாக உள்ளது. பிறரைப் பற்றி அறிய வேண்டும் என்ற வேட்கை மனிதருக்கு இல்லை என்றால், இந்தச் செய்தித் தாள்களை வாங்கிப் படிப்பவரே இல்லாத நிலைமை ஏற்படும். பிறரைப் பற்றிய செய்தி அறிய வேண்டும் என்ற வேட்கை இருப்பதால்தான், ஒவ்வொருவரும் காலையிலும் மாலையிலும் செய்தித்தாள் படிக்கின்றனர்; உலகச் செய்திகளையும் வெளியூர்ச் செய்திகளையும் வெளியிடும் செய்தித்தாள் நூறாயிரக்கணக்காகச் செலவிடுகின்றன. ஆனால் மக்களுக்கு உள்ள இந்த இயல்பான வேட்கையைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு சிலர் வேண்டாத செய்திகளுக்குக் கவர்ச்சி தந்து, விற்பனையைப் பல மடங்கு பெருக்கி நிறைய செல்வம் சேர்ப்பதும் உண்டு. அது தவறு. தன்னலத்தைச் சுருக்கிப் பொது நலத்தைப் பெருக்கித் தொண்டு செய்வதே நல்ல செய்தித் தாள்களின் கடமையாகும். மேடைப் பேச்சும் அப்படி அமையத் தக்கதே ஆகும். | செய்தித்தாள்கள் செய்யும் தொண்டை விட ஒரு வகையில் வேறுபட்டது, நாடகங்களும் சினிமாப் படங்களும் செய்யும் தொண்டு. செய்தித் தாள்கள் காலத்திற்கும் இடத்திற்கும் கட்டுப்பட்டுக் குறிப்பிட்ட செய்திகளை வெளியிடுவன. நாடகமும் சினிமாவும் கலைத் துறையைச் சார்ந்தவை. ஆகவே, காலத்தாலும் இடத்தாலும் கட்டுப் படாமல் பொதுவாக உள்ள மனித இயல்புகளை எடுத்துக்காட்டும் கடமை வாய்ந்தவை. ஆனாலும், இவைகளும் மனிதர் வாழ்வைப் பற்றியவைகளே; ஆதலால் பிறர் செய்தி அறிவிப்பவைகளே. செய்தித் தாள்களின் செய்திகள் அந்த அந்தக் காலமும் சூழலும் மாறின் பயன்படாமல் போவன. நாடகமும் சினிமாவும் பொதுவாக நெடுங்காலம் பயன்படுவன. இவற்றைக் காண்பதற்காகக் காசு கொடுத்துத் திரளான மக்கள் சேர்வதற்குக் காரணம் முன்சொன்ன வேட்கையே; பிறர் வாழ்வை அறிய | | |
|
|