அன்றோ! இவ்வாறு உள்ளம் உருகப் பெற்றவரே திரைப்படம் காணும் தகுதி உடையோர். சில நாட்கள் கழித்து, அந்தக் காட்சி நினைவுக்கு வரின், உடனே உள்ளத்தில் பெருமாறுதல் உற்று நெகிழும் துயரநிலை ஏற்படுமாயின், அத்தகையவரைக் கலை நெஞ்சம் உடையவர் என்று கூறலாம். | நாடக மேடையிலும் திரைப்படத்திலும் பெறும் இத்தகைய அனுபவங்களைக் கதையும் காவியமும் கற்கும் போது பெறுதல் வேண்டும். கதை கற்பதற்கும் காவியம் கற்பதற்கும் உரிய தகுதி இதுவே ஆகும். | தன்னை மறப்பதோடு அமையாமல், தன்னை இழந்து கதையின் உணர்ச்சிகளிலும் காவியத்தின் உணர்ச்சிகளிலும் கலந்து உணர்தலே இவற்றைக் கற்கும் முறை ஆகும். கணக்கு, நிலவியல், நீதிநூல், வரலாறு முதலியவற்றைக் கற்பவர்க்கு இது வேண்டா. | நாடகத்தையும் திரைப்படத்தையும் கண்டு, அந்தக் கற்பனையுலத்திற்குச் செல்வதற்குத் தடை ஒன்றும் இல்லை. காணும் கண்ணே வாயில்; உதவியான ஒளி இருப்பின், இது எளிய வாயில்; கற்றவர் கல்லாதவர் அனைவர்க்கும் அமைந்துள்ள எளிய வாயில். | ஆயின், கதையும் காவியமும் கற்பவர்க்குக் கண் மட்டும் போதாது; செவியும் போதாது; சொற்கள் வாயிலாகவே கதை உலகத்திற்கும் காவிய உலகத்திற்கும் செல்ல வேண்டும். அந்தச் சொற்களின் பொருளை அறிய மூளையின் உதவி வேண்டுவதாக உள்ளது. அறியாத சொற்களின் பொருளை அறிவதற்கு உழைப்பு வேண்டும். இன்றைய மொழியாக இல்லாமல், பழங்காலத்து மொழியாக இருப்பின், அக்காலத்தில் சொற்களுக்கு அமைந்திருந்த பொருள்களை உணர்தல் வேண்டும். அந்தச் சொற்களால் பழங்காலத்து நிகழ்ச்சிகளை உணர்ந்தபோது, | | |
|
|