பக்கம் எண் :

 கற்கும் முறை 183
 
அனுபவங்களைக் கொண்டே, நாடகம் முதலிய கலைகளில் உள்ள உணர்ச்சிகளை எட்ட
முடியும்.
 
     மேடையில் கணவனை இழந்த கற்பரசியின் துயரத்தை உணர, கணவனை இழந்த
அனுபவமே வேண்டும் என்பது இல்லை. யாரேனும் ஒருவரை இழந்து வருந்திய
அனுபவம் போதும். ஒரு பசுவையோ, கிளியையோ அன்புடன் வளர்த்து அன்போடு
பழகி வாழ்ந்து அதனை இழந்த அனுபவம் இருந்தாலும், அதைக் கொண்டு
கண்ணகியின் துயரத்தை ஒரு சிறிதேனும் உணர முடியும். பலநாளும் அன்போடு
காத்துப் போற்றி வந்த புத்தகத்தையோ பேனாவையோ இழந்து துயரப்பட்ட அனுபவம்
இருந்தாலும், அது கொண்டு கண்ணகியின் துயரத்தைச் சிறிதேனும் உணர முடியும்.
கணவனையோ, மனைவியையோ இழந்து துயரத்தில் ஆழ்ந்து கலங்கிய அனுபவம்
உடையவராக ஒருவர் இருப்பின்; அத்தகையவர்க்கு அந்த நாடகக் காட்சி
பெரியதோரளவில் உணர்ச்சி ஊட்டி உள்ளத்தைப் நெக்குருகச் செய்ய வல்லதாகும்.
ஆகவே நாடகம் முதலிய கலைகளில் உள்ள உணர்ச்சியை எய்த வேண்டுமானால்,
வாழ்க்கையில் நிறைந்த அனுபவம் இன்றியமையாதது. குறைந்த அனுபவம் உடையவரும்,
வாழ்க்கையில் பெற்ற அனுபவம் போதாது எனினும், பெற்ற சிறு அனுபவத்தைக்
கொண்டே இயன்றவரை கதைகளையும், காவியங்களையும் கற்றுக் கற்று அந்த
அனுபவத்தைப் பெருக்கியவாறே வளரலாம். மனம் உணர்ச்சிகளால் வளர்வது;
வாழ்க்கையில் எய்தும் உணர்ச்சிகளும் அதை வளர்க்கும் இலக்கியத்தால் பெறும்
உணர்ச்சிகளும் அதை வளர்க்கும். துறவறத்தாராகிய இளங்கோவடிகள் போன்றவர்க்கு
 வாழ்க்கையின் இன்ப துன்ப அனுபவம் குறைவு. எனினும் பிறர் வாழ்வுகளையும் பல
நூல்களையும் கற்றுக் கற்றுப் பெற்ற அனுபவம் அந்தக் குறையை நிறையாக்குகிறது.
அதனால் அவர்கள் நல்ல