கவிஞனும் மனிதனே. ஆனால், மற்ற மக்களைவிடக் கவிஞனுடைய உணர்ச்சிகள் ஆற்றல் மிக்கவை; உணர்ச்சியைச் சொல்வடிவில் வெளிப்படுத்தும் தனித் திறனும் கவிஞனுக்கு உள்ளது. அவற்றை வெளிப்படுத்தும் போது அவன் தன்னை அறியாமலே ஒரு கருவி போல அமைந்து கிடக்கிறான் என்றும், உணர்ச்சிகள் அவன் வாயிலாகத் தாமே வெளிப்படுகின்றன என்றும் கூறுவர். வோர்ட்ஸ் வொர்த் என்னும் ஆங்கிலக் கவிஞர், பாட்டு என்பது ஆற்றலுள்ள உணர்ச்சிகள் தாமே ததும்பி வெளிப்படும் கலை என்பர். (Poetry is the spontaneous overflow of powerful feelings.) | கவிஞனுடைய உணர்ச்சிகள் இவ்வாறு ஆற்றல் மிக்கவைகளாக இருப்பதாலும், இவற்றை வெளிப்படுத்தும் கவிஞன் இவற்றிற்கு இயைந்த கருவி போல் அமைவதாலும், மற்ற மக்கள் காண முடியாதவற்றை அவன் உணர முடிகின்றது; மற்றவர்கள் பயன்படுத்த முடியாத சிறந்த புதுமுறையில் சொற்களைப் பயன்படுத்தவும் கவிஞனால் முடிகின்றது. அதனால் சாப்மேன் (J.C. Chapman) என்னும் ஆராய்ச்சியாளர் உயர்ந்த பாட்டைக் கூறும்போது, அது பொருள்களின் ஆழ்ந்த உண்மைகளை வெளிப்படுத்துவதோடு, உரிய சொற்களின் ஆழ்ந்த உண்மைகளையும் வெளிப்படுத்துவதாகும் என்கிறார். (The greatest | | |
|
|