பக்கம் எண் :

186 இலக்கிய ஆராய்ச்சி
 
poetry reveal the secrets of things and the secrets of words at the same time.)
 
     பூனையின் கண், மனிதன் கண்ணைவிட ஆற்றல் மிகுந்தது. ஆதலால்,
நள்ளிருளில் மனிதனுடைய கண்ணுக்குத் தெரியாதவை எல்லாம் பூனையின் கண்ணுக்குப்
புலனாகின்றன. நாயின் மூக்கு ஆற்றல் மிகுந்தது; அதனால், மனிதனைவிட
முகர்ந்தறியும் திறம் மிகுந்ததாக, மோப்பத்தாலேயே பலவற்றை அறியவல்லதாக
உள்ளது. இவ்வாறே கவிஞனுடைய உள்ளமும் மற்ற மக்களின் உள்ளத்தைவிட உணர்ச்சி
மிகுந்ததாக இருக்கின்றது. அதனால், மற்றவர்கள் உணர முடியாதவற்றையும் உணர
முடிகின்றது. மற்றவர்கள் உணர்கின்றவற்றையும் அவர்களைவிட ஆழ்ந்து உணர
முடிகின்றது. கவிஞனுடைய அகக்கண்ணும், மிக வளர்ந்து பண்பட்டதாகையால்,
கற்பனையில் பலவற்றையும் படைத்துக் காக்கவும் அதனால் முடிகின்றது.
 
     இத்தகைய கற்பனையுலகில் உணர்ச்சி மிக்கவனாகக் கவிஞன் இருக்கும் நேரமே
மிக மிகச் சிறந்த நேரம்; அந்நிலையில் அவன் மனிதனாக வாழவில்லை; படைக்கும்
கடவுள் போன்றவனாக அந்த நேரத்தில் வாழ்கின்றான். அவனுடைய சாதாரண
வாழ்க்கை வேறு. கற்பனையுலகில் திளைக்கும் அந்தப் பொழுது சிறிது நேரமே
ஆயினும் அவன் உயர்ந்த கலைச் செல்வத்தைப் படைக்கும் நேரம் அது. அவன்
தன்னை இழந்து - தன்னை மறந்து - கலையின் கருவியாய் இயைந்து அமைந்துள்ள
நேரம் அது. புல்லாங்குழலில் நுழையும் காற்றுத் தானாகவே இசையைப் பிறப்பித்தல்
போல், அவனுடைய உள்ளத்துள் எழும் உணர்ச்சிகள் அவனை அறியாமலே
பாட்டுக்களைப் படைத்துக் கொள்கின்றன.
 
     தொடர்களை எழுதுகிறவர்களின் அனுபவத்தைக் கொண்டு இதனை உணரலாம்.
தாக்கரே (Thackeray)