என்றெல்லாம் உணர்ந்தே இக் கருத்தைப் பழமொழியாக்கி வழங்கினர் முன்னோர். | இந்தப் பழமொழியைப் புலமைத் துறைக்கும் பொருத்திக் காணலாம். கல்வியிலும் அகல உழுதல் (Extensive Study) ஆழ உழுதல் ( Intensive Study) என இருவகை உண்டு. பலவகை நூல்களையும் ஒவ்வொரு முறை படித்து வேறு வேறு நூல்களைத் தேடித் திரிகின்றவர் அகல உழுகின்றவர். பலவகை நூல்கள் அடங்கிய நூல் நிலையம் தமதாகவோ தமக்கு அண்மையில் உள்ளதாகவோ இருந்தாலும், அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் பொறுக்கி எடுத்துக்கொண்டு, அல்லது அந்தச் சில நூல்களை விலைக்கு வாங்கி வைத்துக்கொண்டு, அவற்றை மட்டும் திரும்பத் திரும்பப் படித்துப் பயன் பெறுகின்றவர் ஆழ உழுகின்றவர். | இளமையில் பள்ளிக்கூடங்களில் படிக்கும்போது ஆழ உழும் கல்வி ஏற்பட வேண்டும் என்றே கல்வியதிகாரிகள் பாடப்புத்தகங்கள் என்று சிலவற்றை அமைக்கின்றார்கள். அந்தப் புத்தகங்களைத் திரும்பத் திரும்பப் படிக்குமாறு வழி வகுக்கின்றார்கள். ஆனாலும், இளமையின் தன்மை வேறானது; ஆழ உழுவதில் ஆர்வம் எழாத பருவம் இளமை; அதனால், பள்ளிக்கூட மாணவர்கள் பாடப் புத்தகங்களை ஒரு வகையாகப் படித்துவிட்டு வேறு வேறு நூல்களையும் செய்தித்தாள்களையும் தேடித் திரிகின்றார்கள். அவர்களில் சிலர் பாடப்புத்தகங்களை முற்றிலும் வெறுத்து, வேறு புத்தகங்களையும் வார வெளியீடுகளையுமே விரும்பி நாடுகின்றார்கள். இன்று சிறுவர்க்கு உரிய பத்திரிகைகளாகப் பல வார வெளியீடுகள் செல்வாக்குப் பெற்று வருவதற்குக் காரணம் இதுவே. பாடப் புத்தகங்களைப் பலமுறை படிக்கின்றார்கள்; பத்திரிகைகளை ஒரு முறை இரு முறைதான் படிக்கின்றார்கள். ஆனால் அவர்களுடைய வெறுப்பின் | | |
|
|