வழக்கமாகும். இத்தகைய நண்பர்கள் உதவி செய்யும்போது விரைவது போலவே திருத்தும் போதும் விரைவார்கள். |
| நகுதற் பொருட்டன்று நட்டல்: மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு |
| முகநக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அகநக நட்பது நட்பு |
(திரு. 784, 786)
|
என்று வள்ளுவர் சிறந்த நட்பைப் பற்றித் தெளிவாக விளக்கியுள்ளார். |
நட்பைப் பற்றி மேலும் கூறும்போது, கற்கக் கற்க நயம் பயக்கும் நூல் போல், பழகப் பழக இனிய நன்மை மிக விளைவிப்பதே சிறந்த நட்பு என்று கூறியுள்ளார். |
| நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு |
(திரு. 783)
|
இவ்வாறு நூலையும் நட்பையும் தொடர்பு படுத்தி விளக்கினமையால், சிறந்த நட்பைப் போல் உயர்ந்த நூல் இன்னது என்பதையும் ஆராய்ந்து அறியலாம். |
சில நூல்களை ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் வைத்திருந்து ஒரு பகுதியைப் படித்து முடித்த பிறகு கவலை இல்லாமல் மறந்துவிடலாம். அவைகள், புகைவண்டியில் பயணம் செய்து நட்புக் கொள்ளப் படுகின்றவர்களைப் போன்றவைகள். |
சில நூல்கள் கற்போரைத் திருத்த முடியாது; எண்ணச் செய்யவும் முடியாது. படிக்கும் நேரத்தில் இன்பம் பயக்கும். தொடர்ந்து படித்தால் மிகுதியான பயன் காண முடியாது. அதற்கு மாறாகக் கடமையை மறக்கச் செய்து மனச் சான்றையும் அடங்கச் செய்து பொழுதைப் போக்குமாறு தூண்டும். |