பக்கம் எண் :

நல்ல நூல் 33
 
காலத்தில், அந்தப் பெருமக்களின் திருவுள்ளங்களோடு தொடர்பு கொள்ள முடிகிறது.
ரஸ்கின் என்னும் ஆங்கில அறிஞர் கூறுமாறு, அரசர், அமைச்சர் முதலானவர்களைக்
காண்பதற்கு நாம் காத்திருக்கும் நிலைபோல் இல்லாமல், நாம் எளிதில் கண்டு
மகிழுமாறு நமக்காக அந்தப் புலவர் பெருமக்கள் என்றும் எங்கும் கருணை கொண்டு
நூல் வடிவில் காத்திருக்கின்றனர். ஆகவே, நல்ல நூல் என்பது எழுத்துச்
சொற்பொருள்களால் ஆன ஏடுகள் அடங்கிய ஒன்று அன்று; நமக்காகக் காட்சி
அளித்துக் கருணை பொழிய என்றும் எங்கும் நமக்காகக் காத்திருக்கின்ற
பெருந்தகையின் திருவுருவம் எனலாம்.