பக்கம் எண் :

  5. சங்கப் பலகை
 
     "தமிழ் நாட்டில் நல்ல நூல் ஒன்றை ஆயிரம் பிரதிகள் அச்சிடுவதற்குத்
தயங்கவேண்டியிருக்கின்றதே! என்ன நாடு இது!" என்றார் நண்பர் ஒருவர். 
 
     "தமிழ் நாட்டில் உள்ள மக்களின் தொகை எவ்வளவு? அதில் படித்தவர்களின்
தொகைஎவ்வளவு? படித்தவர்களிலும், பள்ளிக்கூடத்தைத் துறந்த பிறகும்
படிக்கின்றவர்களின்தொகை எவ்வளவு? அவர்களிலும் படிக்க வேண்டும் என்ற ஆவல்
இருந்தும் நூல்கள்வாங்கப் பணம் இல்லாமல் வறுமையால் வாடுகின்றவர்கள் பலர்
இல்லையா?" என்றேன். 
 
     "என்னங்க எங்காவது கொலையோ, தூக்கு தண்டனையோ நிகழ்ந்தால்,
'தலைவெட்டி தம்மராயன் கதை ஓர் அணா' என்றும், 'கொலைகாரக் கோவிந்தனுக்கு
தூக்கு ஓர் அணா' என்றும் சைனாபசாரும் மவுண்ட் ரோடுமாகச் சுற்றிச் சுற்றி
விற்கின்ற நூல்களுக்குக் கணக்கு இல்லையே! மூன்று நான்கு நாட்களில் சென்னையில்
மட்டும் லட்சம் பிரதிகள் விற்றுவிடுகின்றார்களே! இன்னும் மற்ற ஊர்களில்
எவ்வளவு!" என்றார். 
 
     எந்தத் துறையிலும் பொதுமக்கள் விரும்புவது ஒன்றாகவும் அறிஞர்கள்
விரும்புவது வேறொன்றாகவுமே காணப்படுகின்றன. பொதுமக்கள் கதைகள் கலந்த