பக்கம் எண் :

36 இலக்கிய ஆராய்ச்சி
 
     ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் நினைவு நிதிக்காக அறிஞர்
பெர்னார்ட் ஷா எழுதிய (The Dark Lady of the Sonnets) நாடகத்தில் இந்த உண்மையை
விளக்கும் பகுதி ஒன்றை அமைத்திருக்கின்றார். அந்த நாடகத்தில் நள்ளிரவில்
காதலியைத் தேடிக்கொண்டு சென்ற ஷேக்ஸ்பியர் எதிர்பாரா வகையில் எலிசபெத்
அரசியையே எதிர்ப்படுகின்றார். அரசியிடம் தம் நாடகத் தொழில் பற்றி ஷேக்ஸ்பியர்
குறிப்பிட்டுப் பேசும் வாய்ப்பு வருகின்றது. அப்போது தம் நாடகங்களையும் அரசி
முன்வந்து பண உதவி செய்து போற்ற வேண்டும் என எடுத்துரைத்து வேண்டுகின்றார்.
அரசியோ, வழக்கம் போல், பணமில்லாக் குறையைக் குறிப்பிட்டு, நாடகக் கலை
பொதுமக்களிடம் ஆதரவைப் பெற்றே வளர வேண்டும் என்கிறார். அப்போது
ஷேக்ஸ்பியர், தாம் எவ்வளவோ நல்ல நாடகங்களை எழுதி நடிக்கச் செய்து
பொதுமக்களுக்குக் கலைச் சுவை அளிக்க முயன்றும் வறுமைக்கு ஆளாகி
வருந்துவதைக் குறிப்பிடுகின்றார். அதே நேரத்தில், ஒரு பயனும் அற்ற, கலைச் சுவை
குறைந்த நாடகங்களை எழுதி நடிக்கச் செய்தால் அவற்றையே பொதுமக்கள் விரும்பிப்
போற்றுவதாகவும் அவற்றால் பணம் வருவதாகவும் கூறுகின்றார். பணம் தரக் கூடிய
நாடகங்களே ஆனாலும் அவற்றை இயற்றுவதில் தமக்கு வெறுப்பே இருப்பதாகவும்
அந்த வெறுப்பைப் புலப்படுத்தும் வகையிலேயே அவற்றிற்குப் பெயர்கள் இடுவதாகவும்
குறிப்பிடுகின்றார். (Much Ado About Nothing. As you Like It - not as I like it.)
 
     'பாம்பறியும் பாம்பின் கால்' என்பதற்கு ஏற்ப, நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரின்
அனுபவத்தை உணர்ந்தவர் இந்நூற்றாண்டின் நாடக ஆசிரியரான பெர்னார்ட் ஷா.
அவர் இவ்வாறு எழுதியுள்ளார். பொதுமக்கள் காணும் கலைச்சுவை எத்தன்மையானது
என்பதையும், அறிஞர்