பக்கம் எண் :

6. உள்ளம் பலவகை 43  
     வண்ண ஓவியம் ஒன்று ஒருவருடைய கண்ணையும் கருத்தையும் கவரும்
கலைச்சிறப்பு உள்ளதாக இருக்கின்றது. அதே ஓவியம் இன்னொருவர்க்கு
வண்ணங்களைக் கொட்டிக் கலந்த வெறும் படமாகத் தோன்றுகின்றது. "இந்தப்
படத்திற்கா பத்து முழு ரூபாயைக் கொட்டினாய்?" என்று வெறுப்பைப்
புலப்படுத்துகின்றார் ஒருவர். மற்றொருவர் "நூறு ரூபாய் கொடுத்தாலும் தகுமே"
என்கிறார்.
 
     பட்டினத்தாரின் பாடலைத் திரும்பத் திரும்பப் பாடித் திளைக்கின்றார் ஒருவர்,
"உனக்கு வயது முப்பதும் நிரம்பவில்லையே! அறுபது வயதுள்ள கிழவனைப் போல
உதவாப் பாட்டைப் பாடுகின்றாயே! என்ன உடம்புக்கு?" என்கிறார் மற்றொருவர்.
அவரை அறிவுரை கேட்டாலோ "அகநானூற்றைப் படி, சிந்தாமணியைப் படி,
பாலகாண்டத்தைப் படி, கோவைகளைப் படி, குயில்பாட்டைப் படி, பாண்டியன் பரிசைப்
படி" என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.
 
     உலகம் பலவகை என்று சொன்னவர்கள் நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம் என்னும்
ஐந்து கலப்பினாலாகிய வேறுபாடுகளை மட்டும் கண்டு கூறவில்லை; பலவகை