ஆயின், இலக்கிய உலகம் பல்வேறு வகையானது என்பதை உண்மை என்று நம்புகின்றவர்கள் யார்? இலக்கிய ஆராய்ச்சியில் தேர்ந்தவர்களில் ஒருசிலர் நம்பித் தெளிந்திருக்கலாம். ஆனால், மற்றவர்கள் செய்வது என்ன? "அவருடைய ஆராய்ச்சி பொய். இவருடைய ஆராய்ச்சி குறையுடையது, அன்னாருடைய இலக்கிய அறிவே பாழ், இன்னாருக்கு இலக்கியமே தெரியாது" என்று ஓயாமல் செய்யும் தொண்டுதான். | இலக்கிய ஆராய்ச்சி என்பது புலவர் ஒருவர் இயற்றிய இலக்கியத்தினுள் புகுந்து மற்றொருவர் காணும் காட்சியாகும். அந்த இலக்கியப் பூஞ்சோலையின் வெளியே நின்று அதன் வேலியையும், வேலியாக வளர்ந்த முட்புதர்களையும், வேலியை வளர்த்தவர்களையும், வேலிக்குப் பக்கத்தில் வீழ்ந்து கிடப்பனவற்றையும் காணும் காட்சி மட்டும் ஆராய்ச்சி அன்று. ஒரு புலவருடைய காலம் அவர் காலத்துச் சொற்கள், அவர்காலத்துப் புரவலர்கள், அக்காலத்தைப் பற்றி அறியும் மற்றக் குறிப்புக்கள் முதலியவற்றை ஆராய்ந்து காண்பது ஒரு சிறு பகுதி; இப்பகுதி மட்டும் இலக்கிய ஆராய்ச்சி ஆகாது. இந்த ஆராய்ச்சியில் மட்டும் நின்றால் கருத்து வேறுபாடு குறைவாக இருக்கும்; பெரும்பாலும் இரு வேறு கட்சி மட்டுமே காணப்படும். ஆனால் நேர்மையான ஆராய்ச்சியில் தலைப்பட்டு, இலக்கிய பூஞ்சோலையினுள் நுழைந்த கலைவண்டாய்ப் பறந்து பலவகை மணமும் நுகர்ந்த பிறகுதான் உண்மை விளங்கும்; 'உலகம் பலவகை' என்பது. உள்ளத்து உணர்ச்சியின் பலவகை வேறுபாட்டைக் காட்டுவது போலவே, உணர்ச்சியின் கலை வடிவமான இலக்கியம் பலவகை, இலக்கிய ஆராய்ச்சியும் பல்வேறு வகை என்பதையும் விளக்கும். | அனடோல் பிரான்ஸ் (Anotole France) என்பவர் இலக்கிய ஆராய்ச்சியைப் பற்றிக் கூறிய ஒரு கருத்து இங்கு | | |
|
|