பக்கம் எண் :

  7. இருண்ட சத்திரம்
 
     துணிக்கடையுள் நுழைந்து பார்க்கத் தொடங்கினால், வெவ்வேறு வகையான
மக்கள், வெவ்வேறு வகையான துணிகளை வாங்கிச் செல்வதைப் பார்க்கலாம்.
ஆண்களும் பெண்களும் பலர் வந்து வாங்குகின்றார்கள் என்றும் பருத்தியாடையும்
பட்டாடையுமாகப் பலவற்றை வாங்குகின்றார்கள் என்றும் சுருக்கமாகச் சொல்லி
விடலாம். ஆனால், இது வேற்றுமைகளுக்கு இடையே ஒற்றுமை காண்பதில் வல்ல
அறிஞருடைய - தத்துவ ஞானியினுடைய - கருத்தாக இருக்கலாம். பொதுமக்கள்
இவ்வாறு சுருக்கி ஒருமைப்படுத்திக் கூறமாட்டார்கள். கலைஞர்களும் இவ்வாறு
கூறமாட்டார்கள். அவர்களுடைய கண்களுக்கு ஆடை வகைகளின் பற்பல
வேறுபாடுகளே தெளிவாகத் தோன்றும்.
 
     ஆடைகளின் நிறத்தையும் பளபளப்பையும் பார்த்து வாங்குவோர் சிலர்.
நிறங்களில் சிலர்க்குச் சில நிறம் பிடித்திருக்கும்; சிலர் விரும்பும் நிறத்தையே வேறு
சிலர் வெறுப்பதும் உண்டு. பழைய காலத்துக் கரையையும் அமைப்பையும் நாடி
வாங்குவோர் சிலர். சென்ற ஆண்டில் பாராட்டப்பட்டிருந்த கரையையும் கோடுகளையும்
மதிக்காமல், நேற்றும், இன்றும் புதிதாகப் பரவி வருகின்ற புதுவகைக் கரை, கோடு
முதலியன மட்டும் பார்த்து வாங்குவோர் சிலர். விலையைக் கேட்டறிந்து, கஜம் பத்து
ரூபாய்க்குக் குறைவாக உள்ள மட்டவகையான துணியை