வாங்குவதில்லை என்று நோன்பு கொண்டவர்கள் சிலர். அவர்கள் துணியின் விலைமதிப்பால் தங்கள் வாழ்க்கையில் மதிப்பும் உயரும் என்ற உறுதியான நம்பிக்கை கொண்டு, நம்பிக்கைக்குப் பழுதில்லாமல் வாங்குவார்கள். கருநாடகம் என்று சொல்லத்தக்க சிலர், தாங்கள் வழக்கமாக இருபது முப்பது ஆண்டுகளாக வாங்குகிற துணியையே கடைகடையாகத் தேடிக்கொண்டு திரிவார்கள். காலம் எந்த வகையாக மாறினாலும் அவர்கள் கவலைப்படாமல், தங்கள் பழக்க வழக்கத்தை ஒட்டிக் கொண்டு நடப்பார்கள். அவர்கள் தேடுகின்ற ஆடை இல்லை என்றாலும், 'அது எங்கே கிடைக்கும். எப்போது தருவிப்பீர்கள்' என்று சலிக்காமல் கேட்பார்கள். வாழத் தெரிந்தவர்கள்சிலர் - வாழ்க்கைக் கலையில் வல்லவர்கள் சிலர் - இவ்வாறு ஆடை தேடாமல், எது நன்றாக உழைக்கும். எது விலை குறைவு, விலை குறைவாக இல்லாவிட்டாலும் நாள்பட உறுதியாக இருக்கக் கூடியது எது என்றெல்லாம் தேடி வாங்குவார்கள். திருவள்ளுவர், காந்தியடிகள் போன்ற மனப்பான்மை உடைய வேறு சிலர், "எளிய ஆடை எது? அது தூய்மையானதா? நன்மக்களால் நூற்று நெய்யப்பட்டதா? இந்த நாட்டுப் பொருளா? இந்த ஆடை செய்யப்படுவதில் யாரும் ஏய்க்கப் படவில்லையே! எவ்வகைப் பாவத் தொழிலும் கலக்கவில்லையே! குற்றமற்றதுதான்!" என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்து வாங்குவார்கள். | இத்தனை வகையான மக்களுக்கும் இடங்கொடுத்து அவரவர்க்கு வேண்டிய ஆடைவகைகளைத் துணிக்கடை விற்றுக்கொண்டிருக்கக் காணலாம். கலையுலகமும் ஏறக்குறை இப்படிப்பட்டதுதான். பாட்டுக் கலையிலும் இவ்வளவு வேறுபட்ட துறைகள் இருப்பதைக் காணலாம். | துணிக்கடையில் கண்ட மக்களை நோக்கி, "இங்குள்ள ஆடைகளில் உயர்ந்தது எது?" என்று கேட்போமானால், | | |
|
|