பக்கம் எண் :

50 இலக்கிய ஆராய்ச்சி
 
ஆளுக்குஒரு வகையான விடையே கூறுவர். அவரவர்களின் விடைக்கும் காரணம்
இல்லாமற் போகவில்லை. ஆழ்ந்துணர்ந்துதான் காரணங்கள் புலப்படும். இன்று
பாட்டைப் பாடி உணர்ந்து இன்புறும் மக்களை நோக்கி, "உயர்ந்த பாட்டு எது?" என்று
கேட்டாலும், பற்பல வகையான விடைகளே வரும். அவைகளுக்கும் காரணங்கள் உண்டு.
ஆனால், ஆடை வகைகளுக்குள் காரணம் கூற முடிவதுபோல் அவ்வளவு எளிதில்
பாட்டு வகைகளில் காரணம் கூறமுடியாது. காரணம் என்ன? ஆடைகளின் நிறம்,
விலைமதிப்பு, உறுதி, மென்மை, தூய்மை முதலியவை பெரும்பாலோர் அறிந்தவை.
ஆனால், பாட்டின் ஓசை இன்பம், கற்பனை வளம், உணர்வுச் சிறப்பு முதலியவற்றைப்
பலரும் எளிதில் அறிய முடியாது. பலரும் இன்புற முடியும் என்றாலும், இன்பத்திற்கு
இன்ன காரணம் என்று ஆராய்ந்தறியச் சிலரால் தான் முடியும். இப்படி எளிதில்
காரணம் காண முடியாத துறைகளில் மூடநம்பிக்கைகள் குடிபுகுதல் இயற்கை. பாட்டுத்
துறையில் பலவகை மூடநம்பிக்கைகள் வாழ்வது இதனால் தான்.
 
     நல்ல ஆடை என்று அறிஞர்கள் பொதுவாகக் கருதக்கூடிய ஒன்றில் போதுமான
அளவு நிறம், பளபளப்பு, உறுதி, மென்மை, மதிப்பு முதலியவை இருக்கின்றன. அது
போலவே கலைஞர்கள் பொதுவாகப் போற்றுகின்ற நல்ல பாட்டிலும் போதிய அளவிற்கு
ஓசையின்பம், கற்பனை வளம், உணர்வுச் சிறப்பு ஆகியவை அமைந்திருக்கின்றன.
ஆனால், இந்த 'போதிய அளவு' என்பது எப்போதும் பலரும் விரும்புகின்ற அளவு
அன்று. இதனால் தான் எல்லாத் தொல்லையும் கருத்து வேறுபாடும் விளைகின்றன.
ஆடையின் நிறத்திலே அல்லது பளபளப்பிலே மனம் செலுத்தி விருப்பத்தை
வளர்த்துவிட்ட ஒருவர் உறுதி தூய்மை முதலியவற்றைப் புறக்கணிப்பது போலவே,
ஓசையின்பம் அல்லது