பக்கம் எண் :

இருண்ட சத்திரம் 51
 
கற்பனைத் திறனில் விருப்பத்தை வளர்த்துவிட்டவர் உணர்வுச் சிறப்பைப்
பொருட்படுத்தாமல் விடுகின்றனர். ஆடையின் தூய்மையில் நாட்டம் செலுத்திய
காந்தியடிகள் மற்றவற்றைப் பொருட்படுத்தாதது போலவே பாட்டின் உணர்வுச்
சிறப்பிலே கருத்துச் செலுத்தியவர், ஓசையின்பமும் கற்பனை வளமும் குறைவு
பட்டிருந்தாலும் கவலைப்படாமல் போற்றுகின்றனர்.
 
     தாயுமானவர் பாடலிலிருந்து ஒரு பாட்டைப் பாடிக் காட்டுகின்றார் ஒருவர்:
'என்ன சிறந்த உணர்வு! நினைத்தாலும் இனிக்கின்றதே' என்கின்றார். அதைக் கேட்ட
மற்றொருவர், 'பாட்டென்றால் உயர்ந்த தத்துவஞானியின் உணர்வுமட்டும் இருந்தால்
போதுமா? இதில் கற்பனை வளம் காணோமே. இதோ பார்' என்று முத்தொள்ளாயிரப்
பாட்டொன்றைப் பாடிக் காட்டுகின்றார். இன்னொருவர், "ஆமாம், இருக்கிற ஒழுக்கக்
கேடு போதாதா? பார்க்குமிடமெல்லாம் ஒழுக்கம் கெட்டவர்களைப் பார்ப்பது
போதாதென்று கற்பனையிலும் வேசியரைக் கண்டு மகிழ வேண்டுமா?" என்று சொல்லித்
திருவாசகத்தில் திருவெம்பாவையில் இருந்து ஒரு பாட்டைப் பாடுகின்றார். மற்றொருவர்
குறுக்கே புகுந்து, "என்ன இருந்தாலும் நாச்சியாருடைய பாட்டிலிருக்கிற கற்பனைக்கு
ஈடு ஆகுமா?" என்று சொல்லி ஆண்டாள் திருப்பாவையின் முழங்கை நெய்வாரும்
பாட்டைப் பாடுகின்றார். உடனே வேறொருவர் கம்பரின் கற்பனை வளத்தை
எடுத்துக்காட்ட முனைகின்றார்.
 
     உடனே மற்றொருவர், "வந்துவிட்டீர்களா பொய்க் கற்பனைக்கு? இல்லாததையும்
இருக்க முடியாததையும் கற்பனை செய்து நாடு ஒரு படியும் முன்னேறவில்லையே!
போதும் அய்யா" என்று குறுந்தொகைப் பாட்டு ஒன்றை பாடுவார். முதலில்
தொடங்கியவர் இந்த வாய்ப்பைப்