பயன்படுத்திக் கொண்டு, "பாட்டென்றால் ஓசையின்பம் வேண்டாமா? பாடினால் பொருளுணர்ச்சி புலப்பட வேண்டாமா? ஏதோ லத்தீன் மொழி போல் இருக்கின்றதே" என்று, பிற்காலப் புலவரின் "பெருமாளும் நல்ல பெருமாள்" என்ற வெண்பாவைப் பாடுவார். குறுந்தொகைப் பாட்டைப் பாடியவர் அதை விட்டு, இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையைப் பாடித் தம் மகிழ்ச்சியைப் புலப்படுத்துவார். | இந்தக் கருத்து வேறுபாடுகளையும் விருப்பு வெறுப்புக்களையும் ஒழித்துப் பாட்டின் சிறப்பை அளந்தறிவதற்காக அறிஞர்கள் முயன்று வருகின்றனர். 'கலை கலைக்காகவே; கலைத்துறையில் தத்தம் கொள்கை. கட்சி முதலியவற்றைப் புகுத்தி அளக்கக் கூடாது' என்று வரையறைப் படுத்தும் முயற்சி இப்படிப்பட்டதே. ஆனால், இந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை. இங்கும் நுட்பமான உணர்வுடைய கலைஞர்களின் சுவைக்கும் பொதுமக்களின் சுவைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போன்ற வேற்றுமை இருக்கின்றது. சினிமா உலகமே இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. கலைஞர்கள் போற்றும் படத்திற்குப் பொதுமக்கள் விரும்புவது நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் உள்ளத்தில் ஊறுகின்ற கலைத்தேன். பொதுமக்கள் விரும்புவது கண்டதும் கேட்டதும் உணரப்படும் போதை, கிளர்ச்சி, வெறி, பாட்டுத் துறையிலும் இந்த இருவகைக்கும் இடம் உள்ளது. இரண்டும் இரண்டு எல்லைகள். இடையில் உள்ள நிலைகளோ பல. ஆகையால் ஒவ்வொரு வகையார் ஒவ்வொன்றைச் சிறந்த பாட்டு எனக் கொண்டு போற்றுகின்றனர். இவர் சிறந்தது என்று ஒன்றைச் சொன்னால் "அன்று, அன்று" என்று மற்றொருவர் மறுக்க | | |
|
|