தந்து அவர்களைத் தடுத்தாட் கொள்கின்றது. வளர வளர அவர்கள் படிப்படியாக உணர்கின்றார்கள்; நாவின் சுவையை விட உடல்நலம் சிறந்தது. போற்றத் தகுந்தது என்று உணர்கின்றார்கள். கடைக்காரனைவிடத் தாயே நம்பத் தகுந்தவள், போற்றத் தக்கவள் என்று உணர்கின்றார்கள். இந்த உணர்வு பிறந்த அன்றே தாய்க்கு வெற்றி பிறந்த நாள். | கலையும் ஒருவகை உணவுதான். உடல்வளர்ச்சிக்கு உணவு எவ்வளவு இன்றியமையாததோ, மனவளர்ச்சிக்கு கலை அவ்வளவு இன்றியமையாதது ஆகும். கலையில் வல்லவர் மக்களுக்குக் கலையுணவு தந்து வளர்த்து வருகின்றனர். அத்தகைய கலைஞரிலும் இருவகையினர் உண்டு. ஒருவகைக் கலைஞர் சுவை மிக்க உணவைத் தந்து கவர்ச்சி ஊட்டுவதையே தொழிலாகக் கொண்டவர்கள்; மற்றொரு வகைக் கலைஞர் மனத்தின் பண்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் தகுந்த அளவான சுவை கொண்ட கலையுணர்வு மட்டும் அளிப்பதைத் தொண்டாகக் கொண்டவர்கள். முன்னவர், கவர்ச்சியையும் காசையும் கருத்தில் கொண்டவர்கள். பின்னவர் பண்பாட்டையும் வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டவர்கள். | பொதுமக்களின் வாழ்க்கையில் பொழுதுபோக்கு என்று ஒன்று மட்டுமே இருந்தால் திருந்த வழி இல்லாமல் போயிருக்கும். போராட்டம் என்ற மற்றொன்றும் உடன் அமைந்திருக்கின்றது. போராட்டம் எழாத வரையில், பொழுதுபோக்கிற்காகவே கலையுணர்வைத் தேடி மக்கள் அலைகின்றார்கள். போராட்டத்திற்கு ஆளானவுடனே வாழ்க்கையை எண்ணிப் பார்க்கத் தொடங்குகிறார்கள். இத்தகைய மாறுதல் தனிமனிதனின் வாழ்க்கையில் நேர்வது போலவே சமுதாயத்தின் போக்கிலும் அடிக்கடி ஏற்படுவதும் உண்டு. அப்போதெல்லாம் மக்கள் பொழுதுபோக்குக் கலைஞரைப் புறக்கணித்துவிட்டு, | | |
|
|