முனைந்தார்கள் வாழ்க்கையில் பண்பட்டு வளர வளர வீண் மகிழ்ச்சி, வெகுளி, பகை முதலானவை குறைகின்றன; எளிதில் விருப்பு வெறுப்புக் கொள்ளும் தன்மையும் குறைகின்றது. வாழ்க்கையில் நேரும் இம் மாறுபாட்டைக் கலையிலும் காணலாம். |
உயர்ந்த கலைஞர் தம் கற்பனையில் உயர்வான மக்களையே சிறப்புறப் படைத்துக் காட்ட முயல்வார்கள்; ஆகையால், இழிவகையான மக்களையே சிறப்பாகப் படைத்துத் தகாத சுவைகளைப் பெருக்குவதில் ஆர்வம் கொள்வதில்லை. அத்தகையவர்கள் படைத்தளிக்கும் கலை நுட்பமுடையதாகவே விளங்குகின்றது. அது பொதுமக்களுக்கு எளிதில் பயன் தராததாக உள்ளது. |
வேந்தர்களுள் ஒருவனைப் பழித்தும் மற்றொருவனைப் புகழ்ந்தும் பாடுதல் எளிது; அதுவே மக்களுக்குக் கவர்ச்சி ஊட்டுவது. ஒரு சமயத்தைக் குறைகூறி எள்ளி நகையாடி, மற்றொரு சமயத்தைப் புகழ்ந்து போற்றும் பாட்டு எல்லோருக்கும் விளங்கக் கூடியது; பலரையும் கவரக் கூடியது. சிவனைப் பழித்தும் திருமாலைப் பழித்தும் பாடியுள்ள பாடல்கள் எளிதில் நினைவிருத்திப் பாராட்டலாம். ஆனால், |
| வேறுபடு சமயமெலாம் புகுந்து பார்க்கின் விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால் மாறுபடும் கருத்தில்லை முடிவில் மோன வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா
|
(தாயும்: 42:26) |
என்று சமயங்களின் ஒற்றுமையைப் பாடும் பாட்டு ஒரு சிலர்க்கே சுவை பயக்க முடியும். நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம், சாதிக்குச் சாதி, குலத்திற்குக் குலம் வேறுபாடு வகுத்து உயர்வு தாழ்வு கற்பித்துப் பகைக்கும் |