முதலியவற்றில் துன்பப் பகுதி உள்ளத்தைக் கொள்ளை கொள்வதுபோல் இன்பப் பகுதி உள்ளத்தைக் கவர்வதில்லை. சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டம் பலமுறை கற்கப்படுவதற்கும் கம்ப ராமாயணத்தின் அயோத்தியா காண்டமும் சுந்தர காண்டமும் திரும்பத் திரும்பப் படிக்கப் படுவதற்கும் காரணம் இதுவே. ஷேக்ஸ்பியர் என்னும் ஆங்கிலப் பெரும் புலவர் இன்ப நாடகமும் துன்ப நாடகமுமாகப் பலவற்றை இயற்றியிருந்தும். அவருடைய துன்ப நாடகங்களே சிறந்தனவாகப் போற்றப்பட்டு விளங்குவதற்கும் இதுவே காரணம். | இந்த உண்மையை விளக்க, அரிய காவியங்களையும், நாடகங்களையும் ஆராய வேண்டியதில்லை. ஒரு சிறிய எடுத்துக்காட்டே போதும். நன்றாக வரையப்பட்ட ஓவியம் இரண்டு எடுத்துக் கொள்வோம். ஒன்று, அரசன் ஒருவன் முடிசூடும் காட்சி; அமைச்சரும் ஆன்றோரும் உற்றாரும் மற்றோரும் சூழ்ந்து மகிழ, அரசன் முகம் மலர்ந்து முடிசூடும் காட்சி. மற்றொன்று, அரசன் உயிர் நீங்கும் காட்சி; அரசியும் மக்களும் அரச குடும்பத்தினர் பிறரும் அமைச்சரும் முதலானோரும் சூழ்ந்து கண்ணீர்விட, அரசன் கட்டிலில் கிடந்து கலங்கி உயிர்விடும் காட்சி. இந்த இரண்டில், காண்பவரின் உள்ளத்தைக் கவர வல்லது எது? முடி சூடும் படமா? உயிர் நீங்கும் படமா? முடி சூடும் படத்தைக் காண்பவர் போற்றுவர், வியப்பர்; அவ்வளவே, உயிர் நீங்கும் படத்தின் காட்சியோ காண்பவரை நெடுநேரம் அமைதியில் ஆழ்த்தி உள்ளத்தை உருக்கிவிட வல்லதாகும். | வாழ்க்கையில் துன்பம் வேண்டா, துன்பக் கண்ணீர் வேண்டா, நாள்தோறும் நரி முகத்தில் விழித்தலே வேண்டும் என்று எல்லோரும் விரும்புகின்றனர். ஆயினும் கலையுலகில் துன்பக் காட்சியைக் காணவும் துன்பக் | | |
|
|