பல உணர்ச்சிகள் இயைவதற்கும் இடம் உள்ளது. அதனால் தான் ஒருவகை விடுதலை உணர்ச்சி நெருக்கடிக்கு இடையே ஓய்வு உணர்ச்சி நடுநிலையான அமைதி உணர்ச்சி இவற்றை அவலச் சுவையால் பெற முடிகின்றது. இரக்கம், அச்சம் முதலிய உணர்ச்சிகள் ஒருமுறை தோன்றியபின் அவை ஓய்வதற்கு வேறு வழியே இல்லை. அந்த உணர்ச்சிகள் அடக்கப்படுதல் உண்டே தவிர, இவ்வாறு ஓய்ந்திடுதல் வேறு எங்கும் இல்லை என்கிறார் அவர். (What clear instance of the balance or reconciliation of opposite and discordant qualities can be found than Tragedy? Pity, the impulse to approach. and Terror, the impulse to retreat are brought in Tragedy to a reconciliation which they find no where else. This is the explanation of that sense of release, of repose in the midst of strees of balance and composure, given by Tragedy for there is no other way in which such impulse once awakened, can be at rest without suppression.) | இருவகை உணர்ச்சிகள் ஒத்து இயைவதே அவலச் சுவையின் இன்பத்திற்குக் காரணம் என்று அவர் கூறுகிறார். இரக்கமும் அச்சமுமாகிய இருவகை உணர்ச்சிகளும் துன்பக் காவியங்கள், நாடகங்கள் எல்லாவற்றிலும் அவ்வாறு ஒத்து இயைவதாகக் கூறுவதற்கில்லை. சிலவற்றில் இரக்கம் சிறிது நிற்கின்றது; வேறு சிலவற்றில் அச்சம் மேம்பட்டு நிற்கின்றது. ஆதலின் அவருடைய கருத்து எல்லாவற்றிற்கும் பொருந்தியதாகக் கொள்வதற்கில்லை. ஒரு சில காவியங்களுக்கும் நாடகங்களுக்கும் பொருந்தும் கருத்தாகக் கொள்ளலாம். | அறிஞர் லூகாஸ் 'அவலச் சுவை' என்னும் நூலில் கூறும் மற்றொரு காரணம் ஏற்புடையதாக உள்ளது. வாழ்க்கையில் மேன்மேலும் அனுபவம் பெற வேண்டும் என்றே எல்லாரும் விரும்புகின்றனர். அனுபவம் பெறுவதில் எவரும் சலிப்பதில்லை. அதற்கு | | |
|
|