பக்கம் எண் :

 கலையும் கண்ணீரும் 67
 
தடையாக இருக்கலாம். பலவகை அனுபவங்களைப் பெற முடியாத குறை ஏற்படலாம்.
ஆனால் கற்பனையின் துணையால் அவற்றைப் பெறுவதற்கு நமக்கு முழு உரிமை
உண்டு. வாழ்க்கையில், பெறமுடியாத குறையைத் தீர்க்கக் கற்பனையுலகம்
காத்திருக்கின்றது. அதனால்தான் கதைகள் ஏற்பட்டன. வாழ்க்கையில் அடிக்கடி துன்பம்
காணப்படுவதால், கதைகளும் துன்பம் மலிந்தனவாக ஏற்பட்டன. வாழ்க்கை
அனுபவிப்பதற்கு எப்படிப் பட்டதாக இருந்தாலும், காண்பதற்கு கவர்ச்சியானதாகவே
உள்ளது. ஆகவே, துன்ப உணர்ச்சிகளைப் புகட்டும் கலையை நாடுகின்றோம். உள்ள
உணர்ச்சிகளைத் துறப்பதற்காக அவற்றை நாடவில்லை; அவற்றை மேன்மேலும்
நிறையப் பெறுவதற்காகவே துன்பக் கலையை நாடுகிறோம் என்கிறார். (Experience, ever
more experience, is our craving, Fortune may starve us, but we are free atleast to dream.
This imaginary world is there to redress the balance of the real. That is why stories were
invented. And Since life is often unhappy, so the stories were invented Life is fascinating to
watch, Whatever it may be to experience. And so we go to tragedies not in the least to
get rid of emotions, but to have them more abundantly.)
 
     மேலும் ஆராய்ந்துகாணின், அவர் கூறுவது மிகப் பொருத்தமாக உள்ளது.
வாழ்க்கை பயனற்றதாகவும் குழப்பமானதாகவும் உள்ளது என்றும், அவலச் சுவை
அமைந்த கலையுலகம் ஒழுங்கு மிக்கதாக உள்ளது என்றும் அதனால் வாழ்க்கையில்
சிக்குண்பதை விடக் கலையை நுகர்வது விரும்பத் தக்கதாக உள்ளது என்றும்
கூறுகின்றார். இரக்கமில்லாமல் கொடுமை செய்து அழிக்கும் உலகிற்கு மனிதன்
இரையாகின்றான்; அத்தகைய கொடிய உலகத்திற்கு மனிதன் தரும் மாற்றமே அவலச்
சுவைக் காவியமும் நாடகமும். ஊழ் மனிதனைச் சீறுகின்றது;