பக்கம் எண் :

10. முயலும் ஆமையும்  
 
     பயன் குறைந்த நூல்கள், ஆனால் சுவை மிகுந்த நூல்கள் நூற்றுக்கணக்கான
நெருஞ்சில் போல் கண்ட இடமெல்லாம் தோன்றி நாட்டில் பரவுகின்றன. அவை
எப்படியோ அழிந்து போகின்றன; இருக்குமிடமும் தெரியாமல் மறைந்து போகின்றன.
உயர்ந்த நூல்கள் இரண்டொன்று எங்கோ தோன்றி ஆலமரம் போல் தழைத்து ஓங்கி
நீடு வாழ்கின்றன. நூற்றுக் கணக்கான மட்ட நூல்கள் அழிவதற்கும், இரண்டொரு
சிறந்த நூல்கள் நிலை பெறுவதற்கும் காரணம் என்ன, மட்டமான நூல்கள் சுவை
மிகுந்தனவாகவும் வேகமாகப் பரவக் கூடியனவாகவும் இருந்தும் மறைந்து போகின்றன
என்றால், வியக்கத்தக்க காரணம் இருந்தே தீர வேண்டும்.
 
     சென்னையில் குஜிலிக் (கந்தசாமிக் கோயில் பக்கம்) கடையில் ஓர் அணா
இரண்டனா விலையில் ஆயிரக் கணக்கான புத்தகங்கள் விற்பனையாகின்றன.
அவற்றால்தான் அந்தப் புத்தகக் கடையில் வருவாயும் கிடைக்கின்றன. ஆனால், 1939-ல்
அந்தக் கடைகளில் இவ்வாறு விற்பனையான புத்தகங்கள் என்ன என்று பட்டி எழுதி,
1949-ல் விலையாகும் புத்தகங்களையும் எழுதி ஒப்பிட்டால், உண்மை விளங்கும். 1939-
விலையான புற்றீசல் போன்ற புத்தகங்களில் ஒன்றையாவது இப்போது காண முடியாது.
பத்து ஆண்டுகளில் அந்தப் புற்றீல்சல்களின் வாழ்வு