பக்கம் எண் :

 முயலும் ஆமையும் 71
 
இன்னும் சில ஆண்டுகளில் தேடியும் கிடைக்காதவைகளாக மறையும். நல்ல நூல்
ஐம்பது ஆண்டுகட்கு ஒருமுறை தோன்றலாம். இதை யார் படிக்கப் போகிறார்கள். யார்
வாங்கப் போகின்றார்கள். இது எப்படிப் பரவப்போகின்றது என்று அதன் ஆசிரியரும்
தயங்கலாம்; மற்ற அறிஞர்களும் தயங்கலாம்; அவ்வளவு தயக்கத்தோடு வெளிவரும்
அந்த நூல் நல்ல இலக்கியமாக விளங்கும் தன்மை இருந்தால் சில ஆண்டுகள் கழித்துப்
பெருவாழ்வு பெறுவது உறுதியாகும்.
 
     புற்றீசல்கள் தாமே இயற்கை அற்றுப் பறக்க முடியாமல் விழுவதுபோல்,
புத்தகங்கள் விழக் காரணம் என்ன? அவற்றில் உள்ள பயன் குறைந்த கருத்துக்களே
ஆகும். தீய கருத்துக்களைப் பற்றி எழுதிய புத்தகங்கள் தீயவர்களின் உள்ளத்தைக்
கவரும். இழிசுவை மலிந்த கருத்துக்களை எடுத்துரைக்கும் புத்தகங்கள் இழிந்தவர்களின்
உள்ளத்தைக் கவரும். இத்தகைய புத்தகங்கள் தமக்கு ஏற்ற மக்களையே கவர்ந்து
சுவையூட்ட முடியும். அந்த மக்கள் பண்பாடு அற்றவர்களாக, ஒழுக்கம்
இல்லாதவர்களாக இருக்கும் காரணத்தாலேயே மட்டமான சுவைகளைக் கண்டு மயங்கி
இந்தப் புத்தகங்களைப் போற்றுகின்றார்கள். உயர்ந்த பண்புகள் இல்லாத காரணத்தால்
'நன்றியுணர்வு' என்னும் நற்பண்பும் இவர்களிடம் காணமுடியாது. உயர்ந்த பண்புகளில்
சிலவற்றை ஒருவரிடம் கண்டால், மற்றவற்றிற்கும் இடம் உண்டு எனக்கூறலாம்;
இனியேனும் இடம் ஏற்படும் என நம்பலாம். பொய்யை வெறுப்பவன் புறங்கூற
மாட்டான்; இனியேனும் புறங்கூறாதிருக்க முயல்வான். பிறர் பொருளைக் கவர
எண்ணாதவன் சினமும் கொள்ளாதிருக்க முயல்வான்; இவ்வாறே நற்பண்பு சிலவற்றை
உடையவன் மற்ற நற்பண்புகளுக்கும் இருப்பிடமாக அமைவான். அவ்வாறே தீய
பண்புகளும் ஒற்றுமையாக வாழ விரும்பி உரியவரிடம் ஒன்று சேர்கின்றன. பண்பாடு
அற்றவர்களாய் ஒழுக்கம்