பக்கம் எண் :

 முயலும் ஆமையும் 73
 
வருகின்றது என்றால் அந்தத் துறையில் ஈடுபடும் மக்கள் நன்றியுள்ளவர்கள் எனக் கூற
வேண்டும். எதிர் காலத்தில் தமிழ்நாடு சிறப்புடன் விளங்க முடியுமா என்று கேட்டால்,
தமிழ் நாட்டு மக்கள் நன்றியுடையவர்களாக வாழ்வார்களா, தாம் ஒருவர்க் கொருவர்
செய்து கொள்ளும் உதவிகளை நினைத்து நன்றியோடு வாழ்வார்களா, தம்மவரைப்
பழித்து ஒதுக்கிவிட்டுப் பிறரைப் போற்றித் திரியும் வழக்கம் இல்லாமல் வாழ்வார்களா
என்று கேள்விகளை எழுப்ப வேண்டும். புத்தங்களின் வாழ்விலும் இந்த உண்மையே
காணத் தக்கது.
 
     புத்தகங்களை எழுதியவர்களும் படிக்கின்றவர்களும் நற்பண்பு
இல்லாதவர்களானால், அவற்றின் வாழ்வு புற்றீசல் வாழ்வுதான், நன்றியுணர்வு இல்லாத
மக்கள் அந்தப் புத்தகங்களைப் படிக்கக் காரணம் என்ன? அவைகளில் உயர்ந்த
கருத்துகள் இல்லாமல் இழிசுவை மலிந்த கருத்துக்கள் இருப்பதே காரணமாகும்.
அவற்றை அவர்கள் ஒருமுறை இருமுறை படித்தபின் அளவுக்கு மீறிப் பாராட்டுவார்கள்;
ஒருவாரம், இருவாரம் பாராட்டுவார்கள். அப்பால் அவற்றைப் பற்றிக் கவலைகொள்ள
மாட்டார்கள். நன்றியுணர்வு இல்லாத நெஞ்சில், இந்தப் புத்தகங்களைப் பற்றி ஆழ்ந்த
நினைவும் மதிப்பும் ஏது? கானாற்று வெள்ளம் போல் அவர்களின் உள்ளத்தில் ஒரு
குறிப்பிட்ட காலத்தில் உணர்ச்சிப் பெருக்கு ஓடும். அப்போது தலைகால் தெரியாமல்
கொண்டாடுவார்கள். வெள்ளம் ஓடி வடிந்தபின், அந்த கானாற்றில் ஊற்றுநீர்க்கும் வழி
இருக்காது. ஊறாது ஓடிவிட்ட மழை வெள்ளம் ஆகையால் கானாற்றில் பழைய
வறட்சியே காணப்படும். தலைகால் தெரியாமல் கொண்டாடியபின், அடியோடு
மறக்கவோ நேர்மாறாகப் பழிக்கவோ நன்றி கெட்ட நெஞ்சம் தயங்காது.
 
     மதனகாமராஜ லீலைகள் முதலிய புத்தகங்களைப் படிக்கும் மனம் வேறு.
அகநானூறு, நற்றிணை முதலியவற்றைக்