புரிந்து வாழ்ந்திருந்தால், அவனைப் பற்றிச் சில பெரியகாவியங்களே தோன்றியிருக்கும். அவனைப் பற்றி இன்று அறியக் கிடக்கும் சில குறிப்புகளே அவ்வாறு போற்றி எண்ணுமாறு தூண்டுகின்றன. இந்தச் சோழ வேந்தனைப் போலவே, பாண்டியரிலும், சேரரிலும் சிறந்தவர் சிலர் இருப்பதை அறிகிறோம். ஆனால் அவர்களைப் பற்றி நூல் என்று சொல்லக்கூடிய அளவில் இலக்கியம் வளர்ந்திருக்கக் காண்கின்றோமா? வள்ளல்கள் அத்தனைப் பேர்களைப் பற்றியும் காவியங்கள் உண்டா? செல்வமும் செல்வாக்கும் வாய்ந்தவர்களைப் பாட வேண்டும், புகழ வேண்டும் என்பது கருத்து அன்று. உண்மையாகவே, அந்தப் பெரு வேந்தர்களும், வள்ளற் பெருமக்களும் புலவர் பாடுவதற்கு உரிய விழுமிய வாழ்வு வாழ்ந்தவர்கள்; புலவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர்கள்; புலவர் பாடும் புகழ்பெற்றவர்கள்; ஆனால் ஒரு நூல் உண்டா? இல்லை. பாரி போன்ற வள்ளல் ஒருவன் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அவனைப் பற்றி ஐந்நூறு காவியங்கள் இயற்றப்பட்டிருக்கும். தமிழ் நாட்டில் பிறந்து உணர்வுமிக்க வாழ்வு வாழ்ந்த அவனைப் பற்றி இன்று ஒரு காவியமும் இல்லை. போதிய வரலாற்றுக் குறிப்பும் இல்லை. ஒரு வள்ளலின் வாழ்வில் தொடர்பு பட்டு நட்பு முதிர்ந்து, அவனுக்காகவே வாழ்ந்து அவனுக்காகவே உயிர் துறந்த புலவரை வேறு எந்த நாட்டின் வரலாற்றில் காண முடியும்? ஆனால், இந்த நாட்டில் பாரிவள்ளலுக்காகவே வாழ்ந்து இறந்த கபிலர் என்னும் புலவரைப் பற்றி அறிவிக்க இலக்கியம் உண்டா? வரலாறு உண்டா? பிற நாட்டு வரலாற்று உணர்ச்சியும் இலக்கியப் பற்றும் தமிழ்நாட்டில் மோதித் தாக்கிய பிறகே, பாரியைப் பற்றி ஒரு காவியம் தோன்றலாயிற்று. அவ்வாறு தோன்றிய காவியமாகிய பாரிகாதைக்கும் காவியத்தலைவனாகிய பாரிவள்ளலுக்கும் | | |
|
|