மாலைகள் தொடுக்க முனைந்தார்கள். தமிழன்னையும் பாமாலைகள் பல அணிந்து பெருமை பெற்றாள். |
பாரி முதலான பெருமக்களைப் பாடிய கபிலர் முதலிய புலவர்கள் செய்யாத அரிய இலக்கியத் தொண்டை இளங்கோவடிகளும் சாத்தனாரும் செய்ய முடிந்தது எதனால்? கபிலர் முதலான புலவர்களின் நெஞ்சில் இருந்தவை அவர்களுடைய உணர்ச்சி ஒன்றே. அவர்களுடைய அனுபவங்களும் புலமைப் பண்புகளுமே அந்த உணர்ச்சியில் ஊறிக்கிடந்தன. அதனால் வருங் காலத்தைப் பற்றி அவர்கள் எண்ணவில்லை. |
ஆனால் இளங்கோவடிகள் நெஞ்சத்திலும் சாத்தனாரின் நெஞ்சத்திலும் இத்தகைய உணர்ச்சி மட்டும் இருக்கவில்லை; வேறு குறிக்கோள்களும் இருந்தன. கண்ணகி என்னும் பத்தினியின் சிறப்பை உலகம் அறிய வேண்டும் என்றும், தாம் உணர்ந்த வாழ்வின் உண்மைகளை உணர வேண்டும் என்றும் இளங்கோவடிகள் கொண்டிருந்த குறிக்கோளே அவரைப் பெரிய காவியம் எழுதுமாறு தூண்டியது. மணிமேகலையின் தூய தொண்டினையும் புத்தர் பெருமானின் அறநெறியையும் உலகிற்கு உணர்த்த வேண்டும் என்னும் குறிக்கோளே சாத்தனாரை ஒரு காவியம் எழுத வேண்டும் என்று தூண்டியது. இவ்வாறு சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தோன்றித் தமிழன்னைக்கு அணிசெய்த காரணம் இலக்கிய உணர்ச்சி மட்டும் அன்று; இலக்கியத்தை உயர்ந்த குறிக்கோளுக்குப் பயன்படுத்தவேண்டும் என்னும் ஆர்வமும் காரணமாகும். இந்த ஆர்வமே காரணம் என்று கூறினும் ஓரளவு உண்மையே ஆகும். |
இலக்கியத்தை இவ்வாறு பயன்படுத்தும் ஆர்வம்மிகும் போதுதான், சிதறுண்டு தனித்தனியே எழும் உணர்ச்சிகளைக் கோவைப்படுத்தும் கடமை ஏற்படுகிறது. மக்களின் |