மலரிதழில் செய்தி எழுதி அனுப்புவதைப் போன்றது. மலர் வாடிய உடனே எழுதிய எழுத்தும் மறைந்து போகும். நெடுங்காலம் நிற்கவல்ல பெரிய நூலில் ஒரு கொள்கையைப் பரப்புதல், கல்தூணில் எழுத்துக்களைப் பொறித்து அறிவித்தல் போன்றது. ஆதலால் கொள்கையைப் பரப்புவதை முதல் நோக்கமாகக் கொண்ட இளங்கோவடிகளும் சாத்தனாரும் காவியங்களை இயற்றினார்கள்; அவர்களின், நோக்கமும் நிறைவேறியது; தமிழிலக்கியமும் வளம்பெற்றது. | வாழ்வின் தொடக்கத்தில் மனிதன் மலரைத் தனித் தனியாகவே முகர்ந்து மகிழ்ந்தான்; பிறகு அவனுடைய வாழ்க்கையில் நேர்ந்தது ஏதோ ஒருமாறுதல், அந்த மலர்களை மாலையாகத் தொடுத்து அணியச் செய்தது. ஆனால் ஒன்று மட்டும் கூறலாம். மாலை தொடுக்காமல் தனி மலர்களை முகர்ந்து மகிழ்ந்து வந்த காலத்தில் எளிமையும் செம்மையுமே அவனுடைய வாழ்வாக இருந்தன. மலர்களை மாலையாகத் தொடுக்கத் தொடங்கியபோது, எளிமையிலும் செம்மையிலுமே நிலைத்து நிற்காமல் அவனுடைய மனம் வேறொரு பயனையும் நாடிய நிலையிலிருந்து செயற்கை அமைப்பையும் அவன்போற்றி வளர்க்கத் தலைப்பட்டான்; தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் மட்டுமே அல்லாமல் (இடத்தாலும் காலத்தாலும்) அப்பால் உள்ள பிறர்க்கும் பயன்படுமாறு நின்று நிலவும் தொண்டு ஆற்றக் கற்றுக் கொண்டான். | இலக்கியத்தில் மாலை தொடுப்பதன் சிறப்பை மிகப் பழங்காலத்திலேயே நன்கு உணர்ந்தவர்கள் வடமொழிப் புலவர்கள். அதனால் அவர்கள் அக்காலத்திலேயே இராமாயணம், பாரதம் முதலான சுவை மிக்க பெரிய | | |
|
|