ஓவியம், பார்த்து இன்புறவேண்டிய கலை. பாட்டு என்பது பாடி இன்புற வேண்டிய கலை. ஓவியம், பாட்டு இரண்டும் மனத்திற்கு இன்பம் அளிக்கின்றன. ஆனால், அவ்வாறு இன்பம் அளிப்பதற்கு வாயிலாக உள்ளவை வேறு வேறு புலன்கள், ஓவியத்திற்குக் கட்புலன் வேண்டும்; பாட்டுக்குச் செவிப்புலன் வேண்டும். ஆகையால், "அந்த நூலின் ஒரு பாட்டைப் பார்த்து மகிழ்கிறேன்" என்று ஒருவன் சொன்னால், அது மற்றொருவன் "ஓவியத்தைக் கேட்டு மகிழ்கிறேன்" என்று கூறுவதைப் போன்றது தான். | | நீரின் தண்மையும் தீயின் வெம்மையும் சாரச் சார்ந்து தீரத் தீரும்; சாரல் நாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்புஒல் லாதே | (யாப்பருங்கலம்) | என்ற ஒரு பாட்டை உரைநடை போல் படிக்கலாம்; அல்லது வாய்விட்டுப் படிக்காமலே, கதை படிப்பது போல் மனத்திற்குள்ளே படித்துக்கொள்ளலாம். அல்லது மெல்லப் பாடிப் பயிலலாம். மனத்திற்குள் படித்தறியும் போது கருத்து மட்டும் விளங்கியிருக்கும்; ஆனால் ஏதோ பெருங்குறை - சுவை மிக்க மாம்பழத்தை முகர்ந்து பார்த்து | | |
|
|