வைத்துவிட்டது போன்ற குறை - உணரப்படும்; வாய் விட்டுப் படித்திடும் போதும் ஒரு குறை உணரப்படும்; அந்தப் பழத்தை முகர்ந்து பார்த்தது மட்டும் அல்லாமல் மெல்ல அரிந்து அதன் கனிந்த நிறத்தையும் கண்டு பிறகு வைத்து விட்டாற் போன்ற குறை உணரப்படும். பிறகு மெல்ல மெல்லப் பாடும்போது தான், அந்தக் குறை தீர்வதையும் உணரலாம். | ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு வகையான நுகரும் திறன் வேண்டும். பாட்டைப் பாடி இன்புறும் திறன் ஒருவருக்கு உண்டா இல்லையா என்பதைத் தேர்ந்தறிய இது ஒரு நல்ல வழியாகும். மேலே கூறியவாறு மூவகையாக ஒரு பாட்டைக் கற்க முயல வேண்டும். முன்னைய இரு வகைகளில் குறை உணர்ந்து, மூன்றாம் வகையில் குறை தீர்வதை உணர்ந்தால் போதும்; அவ்வாறு உணரப்பெற்றவர் பாட்டு என்னும் கலைக் கோயிலில் நுழைவதற்குத் தகுதி பெற்றவரே ஆவர். பாட்டுக்கலையின் நுகர்ச்சிக்குக் கட்புலன் போதாது. செவிப்புலனின் துணை வேண்டும் என்று உணர்வதே அந்தத் தகுதிக்கு உரிய சான்று ஆகும். | எடுத்துக்காட்டாக உள்ள இந்தச் சிறுபாட்டு எளிய சொற்களால் ஆகியது; எல்லாரும் அறிந்த உண்மையை உணர்த்துவது; தெரிந்த கருத்தாக இருப்பினும், ஆழம் உடையது; அருமையும் உடையது. அவ்வாறு இருந்தும், அந்தக் கருத்து அமைந்துள்ள அமைப்பு, அந்த உணர்வுக்கு உருவம் தந்த கலை, மனத்தை ஒட்டி இன்பம் பயக்க வேண்டுமானால் செவிக்கு ஒருவகை நயத்தை முன்னே அளித்துச் செல்ல வேண்டியுள்ளது. அந்த நயத்தைப் பயப்பதற்காகவே சில ஒலிகள் திரும்பத் திரும்ப ஒலித்து வருமாறும் பல ஒலிகள் ஓர் அளவாக ஒத்துவருமாறும் அமைக்கப் பட்டுள்ளன. திரும்பத் திரும்ப ஒலிக்கும் சில ஒலிப் பகுதிகளையே எதுகை மோனை முதலான பெயர்களால் வழங்குவர். ஒத்த அளவாக ஒலிக்கும் பல | | |
|
|