இவற்றில் கலப்பான மருட்பாவில் சிலவகை ஒலிநயம்; கலிப்பாவின் துள்ளலோசையில் சில பாகுபாடுகள்; வஞ்சிப்பாவின் தூங்கலோசையில் சில வேறுபாடுகள்; தாழிசை துறை என்னும் பாவினங்களில் சில வகை ஒலியமைப்புகள், விருத்தம் என்னும் ஒண்பாவில் பற்பல வகைகள், கிளிக்கண்ணி முதல் நொண்டிச் சிந்து வரையில் உள்ள இசைப் பாட்டுக்களில் பற்பல இனிமைகள், இவ்வாறு ஒலிச் செல்வத்தைப் போற்றிப் போற்றிப் பாகுபடுத்தி இன்புற அமைத்துள்ளனர் முன்னோர். | பலநூறு பாகுபாடு செய்து போற்றப்பட்டு வரும் ஒலி நயமே பாட்டுக் கலையின் உடல்; கற்பனை உணர்வே உயிர். ஆதலின் பாட்டுக் கலையின் உயிர் வாழ்வு செவிப் புலனை ஒட்டியே அமைந்துள்ளது. | 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' என்பது பாட்டுக் கலைக்கும் பொருத்தமான உண்மைதான். | | |
|
|