பக்கம் எண் :

கற்பனை 101

Untitled Document

         ஆல மரத்தின் தன்மை அதனிடமிருந்து தோன்றும் எல்லா 
வித்துகளிலும்    அமைந்து   இருப்பதுபோல்    இந்த    உலகைப்  
படைத்தவனுடைய      தன்மை     எல்லோரிடத்திலும்    வித்தாக
அமைந்திருக்கிறது     எனலாம்.    உலகம்  அவனுடைய  அலகிலா
விளையாட்டு.    உலகப்    படைப்பே  அவனுடைய அரிய கற்பனை.
உலகின்    இயக்கம் சிறந்த ஒழுங்கு  உடையது. உலகத்தின் கூறுகள்
ஒவ்வொன்றிலும்     அந்தத்    தன்மைகளைக் காணலாம். குழந்தை
யிடத்தில்    தெளிவாக    உணரலாம்.  கலைஞனிடத்தில் அவற்றின்
விளக்கத்தைக் கண்டு மகிழலாம்.

மூவகைக் கனவுகள்

         குழந்தைப்  பருவத்தில் கனவு காணும் ஆற்றலைப் பெற்ற
மனிதன், வளர்ந்த    பிறகும் கனவுகள் பல காண்கின்றான். வளர்ந்த
பிறகு அவன்      காணும்  கனவுகளை  மூன்று வகைப் படுத்தலாம்.
உறக்கக்   கனவு,   பகற்கனவு,  கற்பனைக் கனவு என்று அவற்றைக் 
குறிக்கலாம்.     உறக்கத்தில்  காணும்   கனவே    பகற்கனவிற்கும் 
கற்பனைக்    கனவிற்கும்    அடிப்படை   ஆகும். பகற் கனவுக்கும் 
கலைஞனின்     கற்பனைக்கும்    பெரியதொரு  வேறுபாடு இல்லை.
முன்னது    கலை   வடிவம்   பெறாதது.  ஆதலின் நிலைபெறாமல்
அழிவது.   பின்னது   கலை வடிவம் பெறுதலால் அழியாமல் நிற்பது.
வேறுபாடு இவ்வளவே ஆகும்.

         கண்ணாடிச் சாமான் விற்பவன், ஒருநாள் சாமான் நிறைந்த
தன்   கூடையைக்   கீழே   வைத்துவிட்டு நாற்காலி மேல் அமர்ந்து
பகற்கனவு   காணத்    தொடங்கியதாகக்  கதை ஒன்று உண்டு. தன்
எதிரே இருந்த   கண்ணாடிச்   சாமான்களை விற்கும் முயற்சிகளைப்
பற்றி எண்ணிய   அவனுடைய   மனம்  அவனைப் பகற்கனவுகாணச்
செய்துவிட்டது;    இந்தச்   சாமான்களை   இன்று இன்ன விலைக்கு
விற்றால்   இவ்வளவு   ஊதியம்  கிடைக்கும்; இவ்வாறே தொடர்ந்து
சில நாள்   ஊதியம்   கிடைத்தால்   இவ்வளவு   பொருள் சேரும்.
அப்போது     சொந்தமாக ஒரு கண்ணாடிச் சாமான் கடை வைத்துப்
பெரிய அளவில்   வாணிகம் செய்யலாம்; அதனால் பெரும் பொருள்
ஈட்டலாம்;    இவ்வளவு    பொருள்   சேர்ந்த பிறகு ஒரு மாளிகை
கட்டலாம்;   அதில்   பெருமிதமாக உட்கார்ந்திருக்கும்போது நம்மை
இப்போது   புறக்கணித்துக்   கொண்டிருக்கும்   இன்னான்  வந்தால்
இப்படி எட்டி   உதைக்கலாம்  என்று எண்ணிய போது அவனுடைய
கால், எதிரே   இருந்த   கூடையை உதைத்துவிட்டது. அதில் இருந்த