பக்கம் எண் :

102இலக்கியத் திறன்

Untitled Document

கண்ணாடிச்    சாமான்கள் உடைந்து நொறுங்கின. அவனுடைய பகற்
கனவு     கலைந்தது;     அவன் கட்டிய கோட்டை வீண் ஆயிற்று;
உள்ளதையும்   இழந்தோமே என்று கலங்கிச் சோர்ந்து வருந்தினான்
என்று கதை கூறுவர்.

          இது   கதையே   ஆயினும்  பகற் கனவின் தன்மையை
உள்ளவாறு     விளக்குவதாக  அமைந்திருக்கிறது. உறக்கக் கனவில்,
தான் இருப்பினும்   தன் வாழ்வின் சூழ்நிலை மறக்கப்படுவது போல், 
பகற்    கனவிலும்  அப்போதைய நிலை மறக்கப்படுகிறது. அதனால்,
்தான் எதிரே   கிடப்பது   இன்னது என்று தெரிந்ததும் பகற்கனவில்
ஈடுபட்ட   காரணத்தால், அவனுடைய கால், சாமான்களை உடைத்து நொறுக்கிவிட்டது.

கற்பனை :சிறகு

          கற்பனையின்     சிறப்பை  உணர ஒரு கதை கட்டலாம்,
பறவைகளையும்     மனிதர்களையும்    படைத்து  மண்ணுலகத்தில்
வாழுமாறு     கடவுள்   அனுப்பியபோது,   "நீங்கள் வேறு  வேறு 
இடத்தில்     வாழுங்கள்.    ஒரே   இடத்தில் வாழ்ந்து போட்டியும் 
பூசலும்     விளைக்காதீர்கள்"   என்றார்.     அப்போது பறவைகள் 
கடவுளை     நோக்கி,     "மனிதர்கள் பொல்லாதவர்கள். எங்களை 
மென்மையான   உடலோடு   படைத்து விட்டீர்கள். மண்ணில் எந்தப்
பகுதியில் வாழ்ந்தாலும்   இந்த மனிதர்கள் எங்களை விடமாட்டார்கள்.
ஆகையால்   மண்ணெல்லாம்   இவர்களுக்குச்  சொந்தம் ஆகட்டும்;
விண்ணில்   பறந்து    திரியும்    உரிமையை   எங்களுக்கு மட்டும்
கொடுங்கள்"    என்று   பறவைகள்   வேண்டிக்கொண்டன. உடனே
மனிதர்,   "அப்படி   இவைகளுக்கு  உரிமைகள் கொடுத்தால் உயரப்
பறக்கும் காரணம்  கொண்டு இவைகளுக்குச் செருக்குப் பிடித்துவிடும்.
ஆகையால்   எங்களுக்கும்   பறக்கும்   ஆற்றல் வேண்டும்" என்று
கடவுளை   வேண்டிக்கொண்டனர்.   கடவுள் எண்ணிப் பார்த்து ஒரு
முடிவுக்கு  வந்தார்.  பறவைகளையும் மனிதர்களையும் பார்த்து "நான் 
எல்லோர்க்கும்   சிறகு   அமைத்து அனுப்புகிறேன். சிறகு இருந்தால் 
தான் பறக்க முடியும்.   ஆனால்    ஒரு  சாரார்க்கு வெளியே சிறகு
அமையம்;   மற்றொரு  சாரார்க்கு உள்ளே சிறகு அமையும். அப்படி
அமைந்தால்   தான்   போட்டியும்   பூசலும்   இல்லாமல்   நீங்கள்
வாழ்வீர்கள்.    புறச் சிறகு யாருக்குத் தேவை? அகச்சிறகு யாருக்குத்
தேவை?    சொல்லுங்கள்.    உங்கள்   விருப்பம்   போல்   சிறகு