பக்கம் எண் :

கற்பனை 103

Untitled Document

அமைப்பேன்" என்றார். அகச் சிறகு புறச் சிறகு இரண்டும் வேண்டும் 
என்று மனிதர் கேட்டார்கள். புறச் சிறகு மட்டும் பறவைகள் கேட்டன.
உடனே கடவுள்,     பறவைகளுக்குப் புறச் சிறகைப் படைத்துவிட்டு
மனிதர்களுக்கு     அகச் சிறகைப் படைக்கத் தொடங்கினார். 'இந்த
அகச் சிறகால்     பயன்  என்ன? பறவைகளைப் போல் நாங்களும் 
வானவெளியில் பறக்க முடியுமா?" என்று மனிதர்கள் வருந்தி வேண்டி
னார்கள்.      " இந்த அகச் சிறகு போதும்; புறச் சிறகைவிட இதற்கு 
ஆற்றல்      மிகுதி. புறச் சிறகைக் கொண்டு வானவெளியில் மட்டும் 
உயர்ந்து     பறக்க முடியும்.அதுவும் கனமான உடம்பையும் தூக்கிக
கொண்டுதான் பறக்க வேண்டும். அகச் சிறகு மிக உயர்ந்தது. கனத்த
உடம்பைத்   தூக்கிச்செல்லும் முயற்சி இல்லாமல் உடம்பை மண்ணி
லேயே விட்டுவிட்டு உங்கள் மனம் மட்டும் பறந்து செல்லலாம். வான
வெளியில்     மட்டும்     அல்லாமல்   எங்கும் பறந்து செல்லலாம்
என்னிடமும்     அடிக்கடி    பறந்து   வரலாம். நீங்கள்தான் பேறு
பெற்றவர்கள்"      என்று  கடவுள் மனிதர்க்கு ஆறுதல் கூறி விடை
கொடுத்தார்.      அவர்      அமைத்த    அகச் சிறகோடு மக்கள்
மண்ணுலகிற்குவந்து    வாழத்    தொடங்கினார்கள்.   அந்த அகச்
சிறகுதான்   கற்பனை என்று சொல்லப்படுகிறது. களைப்பு இல்லாமல்
சலிப்பு   இல்லாமல்   மனம் பறந்து திரிவதற்கு அமைந்த சிறகு அது.
இதைக்   கதையாகக்    கொண்டு உணர்ந்தால், கற்பனையின் சிறப்பு
விளங்கும்.


கனவை விரும்புதல்

          பகலில் நனவில் கண்டதை அப்படியே இரவில் கனவிலும்
காண்பதாக      இருந்தால்,    பெரும்பாலோர் கனவு காண விரும்ப
மாட்டார்கள்.     பகலில்   காண்பது போதாதா, கனவிலும் அதையே
அப்படியே      கண்டு      துன்புற    வேண்டுமா என்று சலிப்புக்
கொள்வார்கள்.   கனவு   வராமலிருக்க வழி தேடி, மருந்து முதலியன
உட்கொண்டு   தடுத்துக்கொள்வார்கள்.  ஆனால் அவ்வாறு கனவைத்
தடுக்காமலிருக்கக்   காரணம்,   உள்ளதை   உள்ளவாறே காணாமல்,
உள்ளம்   விரும்புமாறு, விரும்பும் பகுதியை விரிவாகக் கனவில் காண
முடிவதே ஆகும்.    ஒருகால், உள்ளம் விரும்புவதற்கு மாறான கனவு
வருமானால்,    அதைப்    பலரும்    வெறுக்கிறார்கள்.    உள்ளம்
விரும்புமாறு    கனவு  அமைந்தால், அதை உவந்து போற்றுகிறார்கள். உறக்கத்திலிருந்து   தட்டி எழுப்பி விழிக்கச் செய்வோர் மீது சினமும்
கொள்கிறார்கள்