| கலைஞர் படைக்கும் கற்பனையும் இத்தகையதே ஆகும். உள்ளதை உள்ளவாறே படைப்பதனால், அது கலையாவதும் இல்லை. அதைப் படைத்திடக் கலைஞரும் முன் வருவதில்லை. உள்ளம் விரும்புமாறு படைக்கும் உணர்ச்சியே பாட்டு, ஓவியம் முதலிய கலைகளுக்கு அடிப்படையாகும். உள்ளதை உள்ளவாறே எடுத்துரைக்கும் ஆற்றலுக்கு இன்றியமையாதது பகுத்தறிவே. அத்தகைய பகுத்தறிவு கொண்டு காரணம் - காணும் அறிவு கொண்டு - கலைகளைப் படைத்தல் இயலாது என்கிறார் கீட்ஸ்.1 எண்ணி எண்ணிச் சிந்தனையில் வாழும் வாழ்வை விட, உணர்ந்து உணர்ந்து உணர்ச்சியில் வாழும் வாழ்வே வேண்டும் என அவர் ஏங்கியதற்குக் காரணம்2, உள்ளம் விரும்புமாறு அமையும் கற்பனை அவரிடம் சிறந்திருந்தமையே ஆகும். இயற்கைப் பாட்டிலும் இயற்கையைப் பாடும் புலவர்களும் உள்ளதை உள்ளவாறு பாடுவதில்லை. உள்ளதில் சிறிது குறைத்தும் சிறிது கூட்டியுமே பாடுகிறார்கள். அதனால்தான் பாட்டு என்பது கலையாகிறது. இயற்கையை உள்ளவாறே பாடித் தருவதானால் அது நமக்கு வேண்டாவே; இயற்கை நம் கண்ணெதிரே உள்ளபோது, அதை ஏன் மீண்டும் அப்படியே சொற்களால் அல்லது வண்ணத்தால் காட்ட வேண்டும்? கற்பனையும் சேர்த்துக் குழைத்துக்காட்டும் கலையைத்தான் நாம் நாடுகிறோம் என்கிறார் கிராம்பி.3 இயற்கையைத் தீட்டிக் காட்டும் நல்ல ஓவியங்களை நாம் விரும்புகிறோம். அவை இயற்கையை உள்ளவாறு காட்டாமல் வேண்டாத பகுதிகள் பலவற்றை விட்டு, அழகுணர்ச்சிக்கு வேண்டியவற்றை மட்டும் கொண்டு தீட்டப்படுவதால்தான் நாம்
1. 'Reasoning cannot creat' - Keats. 2. "Oh, for a life of sensation that of thoughts" 3. We do not want a transcription from nature, since we have the original all ways before us; we want imaginative reconstruction of the Possibilities of nature. - L.Abercrombie, Principles of Literary Criticism, p.86. |