பக்கம் எண் :

106இலக்கியத் திறன்

Untitled Document

விரும்பிப்   போற்றுகிறோம்1   இயற்கையைப்   பாடும் பாட்டுகளும் 
அவ்வாறு       அமைந்திருப்பதால்     தான்     போற்றுகிறோம்.
முல்லைப்பாட்டில்     காட்டில்   உள்ள   எல்லாவற்றையும் புலவர்
விளக்கிக்    கூறவில்லை;   அது அவர் நோக்கமும் அன்று. காட்டு
வழியில்    கார்கால   மழையால் அழகுற்ற சில காட்சிகளை மட்டும்
காட்டியுள்ளார்.

          செறியிலைக் காயா அஞ்சனம் மலர
          முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக்
          கோடல் குவிமுகை அங்கை அவிழத்
          தோடார் தோன்றி குருதி பூப்பக்
          கானம் நந்திய செந்நிலப் பெருவழி.*


           உள்ளவாறே  அமையும் கற்பனை நிழற்படம் போன்றது
எனலாம். ஆயினும், அதிலும் கலைத் தன்மை ஓரளவு அமைய இடம் 
உண்டு. பொருள்களை   அழகுற   அமைத்து அதன்பிறகு அவற்றை
நிழற்படம்   எடுத்தலில்    கலைத்    தன்மை   உண்டு  அன்றோ?
கண்டவாறு  சிதறிக்  கிடக்கும் பொருள்களை ஒழுங்குபடுத்தி அழகுற
அமைத்தலும்    கலையே    ஆகும்.   இயற்கையும்  வாழ்க்கையும்
உள்ளவாறே   அமையும்   கற்பனையிலும்   ஒழுங்கு உள்ளதெனின்
கலை உள்ளது    எனலாம்;  ஒழுங்குக்கு இயையாதவற்றை ஒதுக்கிய
வகையிலேயே அங்குக் கலைப்பகுதி உள்ளது எனலாம்.

உள்ளவாறு காணல்

          ரிச்சர்ட்ஸ்   என்ற   அறிஞர்  கற்பனையை உணர்த்தும் 
ஆங்கிலச் சொல்லுக்கு அறுவகைப் பொருள் தருகிறார்:

          1. மனக்கண்ணில் பொருளைக் காணுதல்.
         2. உவமை உருவகம் முதலியவற்றால் பொருள்களை
            உறவாக்கிக் காணுத
ல்.


          1. A beautiful  landscape is not a real landscape.
much that  belongs  to the 'real' landscape is ignored when
it is apprehended aestheticelly-A.C.Bradley, Oxford Lectures
on Poetry.

           *முல்லைப்பாட்டு, 93-97