| 3. பிறருடைய மனநிலையை-இன்ப துன்பங்களை உணர்தல். 4. வெவ்வேறாக உள்ள பொருள்களை இயைத்துக்காணுதல். 5. வாழ்க்கையின் அனுபவத்தை வெவ்வேறு வகையில் அமைத்துக் காணுதல். 6. பொருள்களை உள்ளவாறேஉணரும்போது, மாறுபட்ட பொருள்களை நிறுத்திக் காணுதல். புன்னை மரம் அரும்பெடுத்துள்ளது.அந்த அரும்புகளைக் காணும் கலைஞரின் கண்ணுக்கு முத்துகள் நினைவுக்கு வருகின்றன. புன்னை அரும்புகள் நீண்டு அமையாமல், கூரிய முனையும் பெறாமல், முத்துகள் போல் உருண்டையாய் வெண்மையாய் உள்ளன. ஆதலின், கண்ணெதிரே காணும் புன்னை அரும்பு களையும் எங்கோ உள்ள முத்துகளையும் தொடர்புபடுத்தி ஒப்பிட்டுக் காட்டுகிறார். புன்னை மரம் முத்துகளை அரும்பாகப் பெற்றுள்ளன என்கிறார். மண்ணா முத்தம் அரும்பிய புன்னை* வேறுபட்ட இடங்களில் உள்ள பொருள்களை ஓரிடத்தில் கொணர்ந்து அழகுபடுத்திக் காட்டும் கற்பனை இது. வீட்டில் வாழும் குருவி, முற்றத்தில் உலரும் தானியத்தைத் தின்று, தெருவில் உள்ள எருப்பொடிப் புழுதியில் குடைந்து ஆடி, மாலையில் வீட்டிற்குத் திரும்புகிறது. அங்கே வீட்டின் இறப்பில் (இறவாணத்தில்) உள்ள குஞ்சோடு தங்கி வாழ்கின்றது. கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து எருவின் நுண்தாது குடைவன ஆடி இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்... மாலை1 உள்ளவாறே அமையும் இந்தக் கற்பனையிலும் கலைத்
* அக 30 1. குறு. 46. |