பக்கம் எண் :

கற்பனை 111

Untitled Document

          அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
         மென்சிறக ராலாற்றும் புறவெனவும் உரைத்தனரே1

          வெப்பத்தைத்   தாங்கி விடாமல் இருக்கவல்ல மூங்கிலும்
அந்தக் காட்டில் வாடி   விட்டது. கதிரவனுடைய வெயில் அவ்வளவு
கடுமையாக  வாட்டியது.    அதனால்   யாரும்  அவ்வழியே செல்ல
முடியவில்லை. நிழல்   இல்லாமற்  போன படியால் பெண் மான் மிக
வருந்தியபோது   ஆண்மான்   தன் உடம்பின் நிழலையே அதற்குத்
தந்து உதவியதாம்.

கல்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால்
துன்னருந் தகையவே காடென்றார் அக்காட்டுள்
இன்னிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்னிழலைக் கொடுத்தளிக்கும் கலை எனவும் உரைத்தனரே.2


          இந்த   மூன்று  கற்பனைகளும்  உண்மை நிகழ்ச்சிகளாக
இருத்தல்   அரிது;   புலவரின்  உள்ளம் - விழைந்தவாறு அமைந்த
கற்பனைகள் என்பது தெளிவு.

          சுனையில்    சிறிது   நீரே  இருந்தது.  அதைக் குடிக்கச்
சென்றன   இரண்டு   விலங்குகள். ஆண் மானும்  பெண் மானுமாய்ச்
சென்ற அந்த   இரண்டு  விலங்குகள் குடிப்பதற்குப் போதுமான நீரும்
அதில் இல்லை.   ஒன்று  குடிப்பதற்கே போதாததாக இருந்தது. அதை
உணர்ந்த - ஆண்   மான்   தான்  குடிக்காமல் ஒதுங்கி நின்று பெண்
மானைக்  குடிக்குமாறு   செய்ய  எண்ணியது. ஆனால் பெண் மானும்
அவ்வாறே   எண்ணி   ஒதுங்கி  நின்றபடியால்   வேறொரு  தந்திரம்
செய்தது.   பெண்மானோடு   தானும் சென்றது. இரண்டு  வாயும் நீரில்
இருந்தன.   ஆனால்  ஆண் மானோ, குடிப்பது  போல்  நடித்து நீரை
உள்ளுக்கிழுத்துப்  பருகாமல்  உறிஞ்சி மூச்சு விட்டுக் கொண்டிருந்தது.
பெண் மான்   குடித்து  நீர் வேட்கை தணிய  வேண்டும் என்ற அதன்
விருப்பம்    நிறைவேறியது.   தான்   நீரின்றி  வருந்தும் அளவிற்குத்
தியாகம் செய்தது.

        சுனையிற் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
       பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்


          1. கலித்தொகை, 11  
          2. கலித்தொகை, 11