பக்கம் எண் :

112இலக்கியத் திறன்

Untitled Document

          கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்ப காதலர்
         உள்ளம் படர்ந்த நெறி1


          இவ்வாறு    நடப்பது  இயலாத ஒன்று என்பது புலவரும்
அறிந்ததே;   ஆயின்   ஆண்   மான்  அன்பின் காரணமாக வேறு 
உதவிகள்   செய்தலை     அறிந்த   அவருடைய உள்ளம் இவ்வாறு 
கற்பனை அமைக்க விழைந்தது.

          ஊரில் ஓவியக்  கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அதைக் 
காண விரும்பினான்   குடும்பத்   தலைவன்.  தான் மட்டும் தனியே
சென்று காண  விரும்பாமல், தன்  மனைவியையும் உடன் அழைத்துச் 
செல்ல விரும்பினான்.   மனைவியிடம்   சென்று    உடன் வருமாறு 
அழைத்தான்.     'அங்கு   உள்ளவை   ஆண்களின் ஓவியங்களா?
அப்படியானால்    நான்  பார்க்கமாட்டேன். பெண்களின் ஓவியங்கள் 
இருக்குமானால்   அவற்றை   நீங்கள்    பார்த்தால் மனம் பொறுக்க 
மாட்டேன் என்றாள் அவள்.

ஓவியர்நீள் சுவர் எழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான் 
தேவியையான் அழைத்திட ஆண்சித்திரமேல் நான்பாரேன்
பாவையர்தம் உருவமெனில்நீர் பார்க்க மனம்பொறேன் என்றாள்
காவிவிழி மங்கைஇவள் கற்புவெற்பின் வற்புளதால்2

          சென்ற   நூற்றாண்டில் பாடப் பெற்ற பாட்டு இது. இதில் 
அமைந்த கற்பனை   சென்ற நூற்றாண்டிலும் மக்களின் வாழ்க்கையில்
காணக்கூடியது  அன்று.  ஆயின், புலவர் ஒழுக்கமும் கற்பும் நீதியும்
பற்றிப் பேரார்வம்   உடையவராதலால், இவ்வாறு இருந்தால் நல்லது
என்று அவருடைய  உள்ளம் விழைந்தவாறு அமைத்த கற்பனை இது.

உணர்ச்சியின் இயல்பு

          உள்ளத்தை     உணர்ச்சியுடன்  கூறும்போது கூட்டலும்
குறைத்தலும்   திரிபும்   நேர்தல்    இயல்பு.   அளந்து   அறிவது;
உணர்ச்சி,   குறித்த   ஒன்றை   ஆழ்ந்து உணர்வது. குறித்த ஒன்று


1. ஐந்திணை ஐம்பது, 38
2. வேதநாயகம் பிள்ளை பாடல்.