| கணவனுக்கு மீண்டும் தும்மல் வந்ததாம். தும்மினால் முன்போலவே ஊடல் கொண்டு அழுவாள் என்ற எண்ணத்தால் அவன் தும்மலை அடக்கிக் கொண்டான் . 'உங்களுக்கு வேண்டியவர் நினைப்பதை எனக்குத் தெரியாமல் மறைக்கிறீர்கள். அதனால்தான் தும்மலை அடக்குகிறீர்கள்' என்று மறுபடியும் ஊடல் கொண்டு அழுதாளாம். தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று1 கனவு காணும்போது பறப்பதாகக் காணலாம்; வாழ்க்கையில் நடக்க முடியாதன நடப்பதாகக் கனவு காணலாம். ஆனால் அப்போது நம் அறிவு ஏன் என்று காரணம் கேட்பதில்லை; ஆராய்வதில்லை; ஐயுறுவதில்லை. அப்போது அறிவு உறங்குகிறது; கற்பனை மட்டும் உள்ளது2 அதுபோன்ற ஒரு நிலையே மேற்குறித்த பாட்டுகளில் உள்ளது. ஆணும் பெண்ணுமாய்க் குரங்குகள் இரண்டு அன்பாக வாழ்ந்து வந்தன. அவை ஒரு குட்டியும் பெற்றன. ஆண் குரங்கு இறந்துவிட்டது. பெண் குரங்கு தன் துணையின் பிரிவுத் துன்பம் தாங்காமல், குட்டியைச் சுற்றத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு, மலைமீது ஏறிக் கீழே குதித்து உயிர் துறந்ததாம். அந்தப் பெண்குரங்கு விதவையாக வாழ்ந்து துன்புற விரும்பாமல், இவ்வாறு தன் வாழ்வை முடித்துக் கொண்டதாகப் புலவர் ஒரு கற்பனையை அமைக்கின்றார். கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக் கைம்மை உய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்லுஉயிர் செருக்கும்.3 1. திருக்குறள், 1318 2. We seem to have lost for the time, all power to compare things or measure them by any rational standard. Our imagination is active but our reason is asleep. - C.T.Winchester, Some Principles of Literary Criticism, p.121. 3. குறுந்தொகை, 69 |