| இது உண்மை நிகழ்ச்சி அன்று; உள்ளதை உள்ளவாறு உரைத்த கற்பனை அன்று; உள்ளம் விரும்புமாறு அமைத்த கற்பனையாகும். இத்தகைய உண்மையின் வரம்பு இகந்த கற்பனை பாட்டுக்கு ஓரளவு வேண்டும் என்கிறார் கவிஞர் கீட்ஸ்.1 வாழ்க்கையும் கற்பனையும் உள்ளம் விரும்புமாறு அமையும் கற்பனைக்கும் வாழ்க்கையே அடிப்படையாகும். வாழ்க்கையின் அனுபவமே அத்தகைய கற்பனையைத் தூண்டுவது. ஆயினும் அனுபவம் உடைய எல்லார்க்கும் அவ்வாறு கற்பனை அமைவதில்லை; உணர்ச்சி பண்பட்ட கலைஞர்க்கே அந்த அனுபவம் அத்தகைய பயனை விளைக்கிறது. நறுமணமும் எழிலும் மிக்க தாமரைப் பூவின் அருகே தவளை நாளெல்லாம் இருக்கலாம். ஆயினும் அது தாமரையின் எழிலையோ மணத்தையோ நுகர்ந்து இன்புறுவதில்லை; எங்கிருந்தோ வந்து சிறிதுநேரம் இருந்து செல்லும் தேனீ அந்தப் பூவின் இன்பத்தை நுகர்கிறது. அதுபோல் வாழ்க்கை பலர்க்கும் பலவகை அனுபவங்களைத் தருவதாக இருந்தபோதிலும், கலைஞர்களே அவற்றைக் கற்பனைச் செல்வங்களாக உணர்ந்து நுகரும் பேறு பெறுகிறார்கள். காவியங்களிலும் கதைகளிலும் இல்லது கூறலாம்; ஆயின், கற்பவர் அது பொய் என்று தெளிவாக உணராதவகையில் கற்பனையைப் படிப்படியே வளர்த்த பின், இல்லது அமைக்கலாம். அந்நிலையில் கற்பவரின் உள்ளம் மயங்கியிருக்குமாதலின், இல்லதைக் கண்டு திகைக்காது. அறிவை உறங்கவைக்கும் ஆற்றல் கலைக்கு உண்டு. அவ்வாறு அறிவு உறங்குமாறு செய்த பின்னர், கற்பனையில் இல்லாததைக் கூறலாம். அது கலை நுகர்ச்சிக்கு இடையூறு ஆகாது. அப்போதும், கூறப்படுவது, வாழ்க்கையின உண்மைக்கு முரண்பட்டதாகவோ முற்றிலும் வேறானதாகவோ இருத்தல் ஆகாது. காலம்கடத்தல் துன்பம் வரும்போது வருந்துவதும் இன்பம் வரும்போது மகிழ்வதும் எல்லா உயிர்க்கும் பொதுவானவை. ஆனால் பத்து 1. Poetry should surprise by a fine excess. |