| ஆண்டுகளுக்கு முன் உற்ற துன்பத்தை நினைத்து வருந்துவதும் ்இன்பத்தை நினைந்து மகிழ்வதும் பறவை விலங்குகளின் வாழ்க்கையில் இல்லை. மனித வாழ்க்கையில் மட்டுமே பழைய உணர்ச்சிகளின் நினைவுகள் மீண்டும் அத்தகைய அனுபவத்தை உண்டாக்குகின்றன. அதனால் தான் மனித உள்ளத்தில் கற்பனை வளர முடிகின்றது. நேற்று உற்ற துன்பத்தை இன்று நினைத்து வருந்தும் மனம் விலங்கிற்கும் பறவைக்கும் இல்லை. நாளை வரக்கூடிய துன்பத்தை எண்ணிக் கவலைப்படும் மனமும் இல்லை. மனிதனுடைய மனம் பல ஆண்டுகளுக்கு முன் உற்ற துன்ப உணர்ச்சியை மீண்டும் நினைவிற்குக் கொண்டு வந்து வருந்துவது போலவேஎதிர்காலத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் வரக்கூடிய துன்பத்தையும் எண்ணி வருந்துகிறது. ஆகவே, மற்ற உயிர்களின் வாழ்க்கையில் இன்பதுன்ப அனுபவம் அவ்வப்போதைய உணர்ச்சியாய்நின்று மறைய, மனித வாழ்க்கையில் அந்த அனுபவம் ்என்றும் நினைந்துஎய்தக்கூடிய உணர்ச்சியாக உள்ளது. இன்னொரு வகையாகக் கூறின் மற்ற உயிர்களின் அனுபவமான உயர்ச்சி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உரியதாக நின்று மறைய, மனிதனுக்கு அது நினைப்பின் அளவில் எல்லாக் காலத்திற்கும் உரியதாக வந்து நிற்கிறது.
இடம்கடத்தல் இவ்வாறு காலத்தால் பரந்து கிடப்பதுபோலவே மனத்தின் அனுபவம் இடத்தாலும் பரவ வல்லதாக உள்ளது. விலங்கோ பறவையோ தன் உடல் உற்ற துன்பத்தை உணர்ந்து வருந்துவதுபோல மற்றோர் உடல் உற்ற துன்பத்தை உணர்ந்து வருந்த முடியவில்லை. துன்ப உணர்ச்சி என்பது அதற்குத் தன் உடலிலிருந்து எழவேண்டிய ஒன்றாக உள்ளது. ஆனால் மனித உள்ளத்தின் அனுபவம் அத்தகையது அன்று. தன் காலில்பட்ட புண் உள்ளத்தை வருத்துவது போலவே, வழிப்போக்கன் ஒருவன் விழுந்து உற்ற துன்பமும் பார்த்த ஒருவனுடைய உள்ளத்தை வருத்துகிறது. இவனும் அவனும் முன்பு பழகி அறியாதவர்களாக இருக்கலாம். ஆயினும் ஓர் உடலின் துன்பம் மற்றோர் உள்ளத்தையும் தாக்குகின்றது. மனித உடலில் துன்பம் மட்டும் அல்லாமல்வேறு எந்த உயிரின் துன்பமாக இருந்தாலும் அவ்வாறே பார்த்தவன் உள்ளத்தைக் கலக்குகின்றது. ஓர் ஊர்தியில் சிக்கிக்கொண்டு ஒரு பசுவின் கால் முறிந்ததென்றால், அதனை |