பக்கம் எண் :

124இலக்கியத் திறன்

Untitled Document

     மேகம்  அருகே வரும்போது கொம்போ கொடியோ எடுத்து
அடிக்கக்கூடிய   உருவத்தோடு  அமைவது இல்லை. தொலைவில்
தோன்றும்போதுதான்   குவித்த பஞ்சை அடிக்கும் விளையாட்டுக்
கை,மேகம் கிட்டினால் விடாது.  அந்த விளையாட்டு உள்ளத்தோடு படைக்கப்பட்ட கற்பனையே இது.


     கடற்கரையில்   பரதவச்   சிறுவர்   கிளிஞ்சில்  கொண்டு
விளையாடிப்   பொழுது   போக்கினார்கள்.  கிளிஞ்சிலுக்குள்ளே
முத்து இட்டு மூடி   அதைக்   கிலுகிலுப்பை போல் ஆட்டி ஒலி
எழுப்பி மகிழ்ந்தார்கள். ஒரு பரதவக் குடும்பத்தில் வளர்க்கப்பட்ட
குரங்கு அவர்களைப் போலவே கிளிஞ்சில் எடுத்து உள்ளே முத்து
இட்டுக் கிலுகிலுப்பை ஆட்டியதாம்:

      மகாஅர் அன்ன மந்தி மடவோர்
     நகாஅர் அன்ன நளிநீர் முத்தம்
     வாள்வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி...
     கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும்...1


     குரங்கு சிறுவரைப்   பார்த்து  அந்தக் கல்வியைக் கற்றதோ
இல்லையோ; ஆயினும் பலவகையில் சிறுவர் போல் விளையாட்டுத்
தன்மையுடைய     குரங்கு   அதையும்   செய்யக்கூடும்   என்று
கற்பனையாகப் படைத்திருக்கலாம். அவ்வாறு கண் கண்டவற்றோடு
உள்ளம்     உணர்ந்தவற்றைக்   கூட்டிப்   புதியன   படைத்தல்
கற்பனையின் இயல்பு ஆகும்.2

     பலாப் பழம்   நறுமணம்   உள்ளது.   மீன்நாற்றம் அதற்கு
மாறுபட்டது.   பலாப்   பழத்தின்   மணத்தை   மூக்கு விரும்பும்;
ஆனால்   மீன்  நாற்றத்தை விரும்பாது. மீன் நாற்றம் நெடியாகித்
தும்மலையும்   உண்டாக்குவதாகப்   புலவர்   ஒருவர்  கற்பனை
செய்துள்ளார்.     பலா   மரத்தில்  குரங்குகள்   இருந்தனவாம்.
பலாப்பழங்களும் பல இருந்தனவாம். எங்கோ சென்று மீன் தேடித் 


     1. சிறுபாணாற்றுப்படை, 56-61.
      2. Imagination thus luses the familiar and the
strange,   the thing I feel  and the thing I see, the
world within and   the world without, into one that
interprets both.
     - J.L.Lowes, Convention and Revolt in Poetry
       p.10.