பக்கம் எண் :

கற்பனை 125

Untitled Document

தின்று வந்த    கொக்குகள்   அந்தப்  பலாமரத்தின் கிளைகளில்
அமர்ந்தன.   அவற்றால்   அங்கே மீன் நாற்றம் பரவியது. அந்த
நாற்றம் தாங்க முடியாமல் பெண் குரங்குகள் தும்மியதாகப் புலவர்
பாடியுள்ளார்:

      கொழுஞ்சுனைப் பலவின் பயம் கெழு கவாஅன்
     செழுங்கோள் வாங்கிய மாச்சினைக் கொக்கினம்
     மீன்குடை நாற்றம் தாங்கல்செல் லாது
     துய்த்தலை மந்தி தும்மும்...*


போன்றது அன்று

     நேரே இயற்கை போல் அமைக்காமல் இயற்கையை உள்ளம்
உணர்ந்தது   போல்   அமைப்பது பாட்டு என்று அரிஸ்டாட்டில்
கருதினார்.  ஓவியக் கலைஞனோ சிற்பக் கலைஞனோ பொருளின்
உருவத்தையோ   வடிவத்தையோ  அவ்வாறே   வடிப்பது போல்
தோன்றினாலும்,   அந்தப் பொருளுக்கும் ஓவியத்திற்கும் அல்லது
சிற்பத்திற்கும்   வேறுபாடு  இருப்பதைக் காண்கிறோம். கலைஞர்
தாம் புறக்கண்ணால்  கண்டதைக் கண்டவாறே கலையில் வடித்துக்
காட்டுவது இல்லை.  தம்  உணர்ச்சிக்கு ஏற்பச் சிறந்த பகுதிகளை
நன்றாக எடுத்துக்காட்டிச்   சிறப்பு இல்லாப் பகுதிகளை அவ்வாறு
காட்டாமல்   விடுகிறார்.   அதனால்தான்   கண்ணால்   காணும்
பொருளுக்கும்   கலையில்   காணும்   பொருளுக்கும் வேறுபாடு
ஏற்படுகிறது.   ஓவியத்திலும்   சிற்பத்திலும் இத்தகைய வேறுபாடு
உள்ளது  எனின்,   இலக்கியத்தில்   அமையும்  வேறுபாட்டைச்
சொல்ல   வேண்டியது   இல்லை.  புலவரின் உணர்ச்சி எல்லாம்
பாய்ந்து   அமைந்த   கற்பனையில்   எவ்வளவோ   வேறுபாடு
புகுந்துவிடுகிறது.   அதனால்தான்  பாட்டு என்பது இயற்கையைப்
போலச் செய்தது   அன்று,  இயற்கையை உள்ளம் உணர்ந்தவாறு
செய்தது என்றார் அரிஸ்டாட்டில்1.


     * நற்றிணை, 326

     1. Plato said poetry imitaked  Nature No, said
Aristotle it   imitates a conception of Nature; and
to that he confined his theory.
    - L.Abercrombie, Principles of Literary Criticism, p.134.