பக்கம் எண் :

கற்பனை 127

Untitled Document

     நீர்வார் நிகர்மலர் கடுப்ப ஓமறந்து
    அறுகுளம் நிறைக்குந போல அல்கலும்
    அழுதல் மேவல ஆகிப் பழிதீர் கண்ணும்...1


     இவ்வாறு    கூறுமிடத்தும், உள்ளம் விழைந்தவாறு கற்பனை
அமைந்த   போதிலும்,  அது   சிறப்பெய்தவில்லை.   இத்தகைய
உயர்வுநவிற்சியாக   வருவனவற்றை,   உண்மை என்னும் உள்ளீடு
இல்லாக்   காரணத்தால்,   வெறுங்   கற்பனை   (fancy)   என
வேறுபடுத்துவர் அறிஞர்.2

வெறுங்கற்பனை

     ஆயினும்,  வெறுங் கற்பனை என்பது சுவையற்றதும் அன்று;
கற்பனைக்கு     முரணானதும்   அன்று.    அதிலிருந்து  சிறிது
வேறுபட்டது,   சிறிது  மிகையானது எனலாம்.  அந்த வேறுபாடும்
மனக்கண் காணும்  காட்சியால் ஏற்பட்டது அன்று; மனம் உணரும்
உணர்ச்சியின் தன்மையால்     ஏற்பட்டது   எனல்  வேண்டும்.3
புலவரின்   உணர்ச்சி    வேடிக்கையாகவும்   விளையாட்டாகவும்
அமையும்போது,   ஆழ்ந்த   பண்புகள் அற்ற, நிலையற்ற வெறுங்
கற்பனைகள் தோன்றும் புலவரின் உணர்ச்சி   ஆழமுடையதாகவும்


      1. அக 11
      2. If the    emotional  nature be somehow flawed-
        tending to  extravagance and sentimentality, the
        imagination tends to run into fancy and loses its
        basis in truth.- C.T.Winchestor,Some Principles of         Literary Criticism. p.145

       Creative imagination spontaneouslyy   selects
       among the elements given by experience and
       combines   them   into   new wholes. If this
       combination   be   arbitrary or irrational, the
       faculty is called Fancy. - Ibid p.123-124.

       Poetry, though no copy of reality, should not be
       mere fancy, but should refer to an interpret, that
       reality. - A.C.Bradley, Oxford Lectures on Poetry

    3. Fancy is nothing but a degree of imagination; and
      the degree of it concerns,   not the quality of the
      imagery, but the quality  and force of the emotion       smbolized by the imagery.

    - L.Abercrobie, The Idea of Great Poetry, p.58.