| உயர்வுடையதாகவும் அமையும்போது நிலைபெற்ற விழுப்பமுள்ள கற்பனைகள் தோன்றும்.1 வெறுங் கற்பனை என்பது. மற்ற எல்லா வகையிலும் உயர்ந்த கற்பனைபோல் தோன்றினும், கற்பனைக்குக் காரணமான உணர்ச்சி விழுப்பம் உடையதாக இராது. வேடிக்கைப் போக்கும் ஆற்றல் குறைந்த உணர்ச்சியும் தான் வெறுங் கற்பனையான பாடல் எழுவதற்குக் காரணம் ஆகும் என்பர். மலையில் ஒருவன் மிக்க வேகத்தோடு கவண்கல் எறிகின்றான். கவணிலிருந்து புறப்பட்ட அந்தக் கல் ஒரு வேங்கைமரத்தின் பூங்கொத்தைச் சிதறிவிட்டு, அப்பால் உள்ள பழுத்த ஆசினிப் பழங்களை உதிர்த்துவிடுகிறது. அப்பால், தேன்கூடு ஒன்றில் பட்டு, அதைத் துளைத்து வெளியேறுகின்றது. அடுத்துள்ள மாமரக் கிளையில் பூங்கொத்துக்களைக் கலக்கிவிட்டு, அருகே இருந்த வாழையின் வளமான இலையைக் கிழித்துச் செல்கின்றது, பிறகு அடுத்திருந்த பலாமரத்தில் ஒரு பழத்தில் பட்டவுடன் அதில் தங்கி விடுகிறது. கடுவிசைக் கவணையிற் கல்கை விடுதலின் இறுவரை வேங்கையின் ஒள்வீ சிதறி ஆசினி மென்பழம் அளிந்தவை உதிராத் தேன்செய் இறாஅல் துளைபடப் போகி நறுவடி மாவின் பைந்துணர் உழக்கிக் குலையுடை வாழைக் கொழுமடல் கிழியாப் பலவின் பழத்துள் தங்கும்...2 1. In Modern critical usage, especially as applied to Poetry, fancy is applied to the process of reproducing and recombiting images of allfiting, superficial, or transient character, made use of in the more playful and consciouly decorative poetic styles, while Imagination is reserved for the making of images which go to show the real nature of things; their spiritual values, and their permenent significane a process made use of in the most exalted and serious moods of the poet- R.M. Alden, An Introduction to Poetry, p.103. 2. கலித்தொகை - 41-10-16. |