வீழ்த்தி, அதன் அருகே இருந்த ஒரு புற்றினை நோக்கிச் சென்று அங்கிருந்த ஓர் உடும்பைத் தாக்கியது. வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறி துறீஇப் புழல்தலைப் புகர்க்கலை உருட்டி உரல்தலைக் கேழற் பன்றி வீழ அயலது ஆழற் புற்றத்து உடும்பிற் செற்றும் வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்1 இந்தக் கற்பனையிலும் வலிய வில்லினின்று எய்யப்பட்ட அம்பு படிப்படியே வன்மை குறைந்த உடம்புகளையும் அளவில் சிறிய உடம்புகளையும் தாக்கி வீழ்த்திச் செல்லுதல் காணலாம். அம்பு எய்த ஓரி, மேடான ஓர் இடத்திலிருந்து எய்ய, அது உயரமான யானையை முதலில் தாக்கி, பிறகு அதனினும் உயரம் குறைந்த புலியை தாக்கி, அடுத்து அதனினும் குறுகிய மானைத் தாக்கி, - பிறகு அதனினும் குறுகிய பன்றியை வீழ்த்தி, பிறகு தரை நோக்கிச் சென்றதையும், தரையில் இருந்த உடும்பின் மீது தாக்கியதையும், அதற்கு அப்பால் ஊடுருவிச் செல்ல முடியாமல் தரையை விடாமல்பற்றிய உடும்பாதலால் அதன் உடலில் தைத்துக் கிடந்ததையும் கூறினார் . இந்த முறைப்படியே விலங்குகள் வேட்டைக்கு வாய்த்தல் அரிது எனினும், புலவரின் உள்ளம் அவ்வாறு விலங்குகள் வாய்க்க வேண்டும் என்று விழைந்ததில் தவறு ஒன்றும் இல்லை. ஆயின், யானையின் உடலிலும் புலியின் உடலிலும் தாக்கிய பின்னும் அம்பு அவற்றின் உடலை ஊடுருவி வெளியே வர வல்லதோ என்று எண்ணும் போதுதான் உண்மையின்றும் விலகியதாகத் தோன்று கிறது. ஆதலின் இது வெறுங் கற்பனையின் பாற்படுவதாகின்றது. ஒரு நகரத்தின் செல்வ வாழ்வைக் கற்பனை செய்கிறார் புலவர். மேகங்கள் நிறைந்து வானத்தே படலம் இட்டாற்போல் உள்ளன. நகரத்தின் மாடிகளில் கட்டிய கொடிகள் அந்த முகில்படலத்தைக் கிழிப்பவை போல் உயர்ந்துள்ளன. அந்தக் 1. புறநானூறு, 152 |